தமிழக பெண்களின் பேங்க் அக்கவுண்டுக்கு வரும் ரூ.52,000! திராவிட மாடல் அரசின் ஜாக்பாட் திட்டங்கள்!

By SG Balan  |  First Published Jun 17, 2024, 11:16 PM IST

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யும் வகையில் 3 திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டுவருகிறது.


தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யும் வகையில் 3 திட்டங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு கொண்டுவருகிறது. முதல் திட்டத்தின் பலன் ஏற்கெனவே கிடைக்கத் தொடங்கிய நிலையில் அடுத்த திட்டம் விரிவாக்கம் பெற உள்ளது. இத்துடன் புதிய திட்டம் ஒன்றும் அறிமுகமாக இருக்கிறது.

இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்:

Tap to resize

Latest Videos

முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு உதவியைப் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டதில் பயன்பெற தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் அரசு உதவியைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. இரண்டாவது பெண் குழந்தை பிறந்தபின் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிக்சட் டெபாசிட் வேண்டாமா? அதை விட பெஸ்டா போஸ்ட் ஆபீசில் நிறைய சாய்ஸ் இருக்கே! ட்ரை பண்ணி பாருங்க!

விண்ணப்பிக்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூ. 25,000/- வைப்பு தொகை பத்திரம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் தேதியில், பெண் குழுந்தையின் தாய் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்துகொண்டிருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என வட்டாட்சியரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை ஒரு குழந்தை உயிரிழந்திருந்தால், அந்தக் குழந்தையின் இறப்புச் சான்றும் தேவை.

மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்:

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இத்திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். கூடுதலாக 2.5 லட்சம் பேருக்கு இந்தத் திட்டத்தில் மாதாந்திர உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் இதில் பயன் அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு முன் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு இத்திட்டத்தில் இடம் கிடைக்கவில்லை. இப்போது அவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத்தொகை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டம்:

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திருமணம் ஆகும்போது உதவித்தொகையும், தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டது. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததும் இந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

திட்டத்தின் பெயரும் 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்' என மாற்றப்பட்டது. புதிய திட்டத்தின்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேரும்போது மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏர் இந்தியா விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் பிளேடு! வாயில் போட்டு மென்று பார்த்த பயணி!

click me!