ஏர் இந்தியா விமானத்தில் அளிக்கப்பட்ட உணவில் பிளேடு! வாயில் போட்டு மென்று பார்த்த பயணி!
உணவு இருந்த கிண்ணத்தில் பிளேடு கிடக்கும் படத்தையும் தனது பதிவுடன் பகிர்ந்துள்ளார். இந்த உணவை ஒரு குழந்தைக்குக் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவின் உள்ளே ஒரு பிளேடு இருப்பதாக பயணி ஒருவர் புகார் கூறியுள்ளார். கடந்த வாரம் ஏர் இந்தியா ஏஐ 175 விமானத்தில் தனக்கு நேர்ந்த அதிர்ச்சி அளிக்கும் அனுபவத்தை அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
பத்திரிகையாளரான மாதுரேஸ் பால் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில், விமானத்தில் வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் அத்திப்பழச் சாட் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, வாயில் உலோகத் துண்டு ஒன்று இருப்பதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். பிறகு அதை பரிசோதித்துப் பார்த்தபோது, அது ஒரு மெட்டல் பிளேடு எனத் தெரிந்தது என்று கூறினார்.
"ஏர் இந்தியா உணவுகள் கத்தியைப் போல வெட்டக்கூடியவை. உருளைக்கிழங்கு, அத்திப்பழ சாட்டில் ஒரு பிளேடு போன்ற உலோகத் துண்டு ஒளிந்திருந்தது. அதை சில நொடிகள் மென்ற பிறகுதான் எனக்கு அது நன்றாகத் தெரிந்தது. அதிர்ஷ்டவசமாக, எந்த பாதிப்பும் ஏற்படவில்லை" என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
டெஸ்லா கார் எல்லாமே ஹேக் செய்யக்கூடியவை தான்! மட்டையடியாகத் தாக்கும் ராஜீவ் சந்திரசேகர்!
அவர் சாப்பிட்ட சாட் இருந்த கிண்ணத்தில் பிளேடு கிடக்கும் படத்தையும் தனது பதிவுடன் பகிர்ந்துள்ளார். இந்த உணவை ஒரு குழந்தைக்குக் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, ஏர் இந்தியா நிறுவனம் பயணியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளது. மாதுரேஸ் பால் ஒரு வருடத்திற்குள் எந்த ஏர் இந்தியா விமானத்திலும் பயணிப்பதற்கான பிசினஸ் வகுப்பு டிக்கெட்டை ஒன்றை இழப்பீடாக வழங்கியுள்ளது. ஆனால், மாதுரேஸ் பால் அதை 'லஞ்சம்' என்று கூறி நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: குறைந்தது 15 பேர் பலி; 60 பேர் காயம்