மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: குறைந்தது 15 பேர் பலி; 60 பேர் காயம்
காலை முதல் விபத்து நடத்த இடத்தில் மழை பெய்ததால் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை. மழை நின்றதும் மீட்புப்பணி தீவிரமாக நடந்துவருகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைங்களுடன் சிகிச்சையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதல்வர் மம்தா பானர்ஜி விபத்துப் நடந்த இடத்தில் மீட்புப்பணிகளை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்க்க இருக்கிறார்.
காலை முதல் விபத்து நடத்த இடத்தில் மழை பெய்ததால் மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள முடியவில்லை. மழை நின்றதும் மீட்புப்பணி தீவிரமாக நடந்துவருகிறது.
உலகின் 100 மதிப்புமிக்க பிராண்டுகள் பட்டியலில் 3 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள்!
விபத்து நடந்தது எப்படி?
மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி அளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் 3-5 பெட்டிகள் சேதமடைந்துள்ளன.
சரக்கு ரயில் சிக்னலை கவனிக்காமல் முன்னேறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால், இந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீஷ் தன்கர் உள்ளிட்ட தலைவர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
திடீரென மெதுவாகச் சுத்தும் பூமியின் உட்கரு! 2010 லயே இப்படி ஆகிருச்சாம்! காரணம் என்ன தெரியுமா?