Latest Videos

Actor Pugazh : இஸ்லாமிய சொந்தங்களே.. தியாகத்திருநாள் வாழ்த்துக்கள் - மனையோடு வந்து வாழ்த்து சொன்ன புகழ்!

By Ansgar RFirst Published Jun 17, 2024, 11:39 PM IST
Highlights

Actor Pugazh : இன்று உலக அளவில் இஸ்லாமியர்கள் தியாகத்திருநாளாக பக்ரீத் திருநாளை கொண்டாடி வருகின்றனர். பல்வேறு பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்தி தெரிவித்து வருகின்றனர்.

கடலூரில் பிறந்து சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் சிறு சிறு வேடமேற்று நடித்து, அதன் பிறகு தான் பங்கேற்ற நிகழ்ச்சிக்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்று, இன்று சின்னத்திரையிலும், வெள்ளி திரையிலும் சிரிப்பு வெடியாய் வெடித்து வரும் பிரபல நடிகர் தான் புகழ். கடலூரில் பிறந்த புகழ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான "சிரிப்பு டா" என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார். 

அதன் பிறகு "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சி இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் புகழ் செய்யும் சேட்டைகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. விஜய் தொலைக்காட்சி கொடுத்து மிகப்பெரிய உத்வேகம் இன்று அவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு அவருடைய நிலையை உயர்த்தி இருக்கிறது. 

Krithi Shetty : அசத்தலான மாடர்ன் உடை.. ஹாட் லுக் கொடுக்கும் யங் நாயகி கீர்த்தி ஷெட்டி - கூல் பிக்ஸ் இதோ!

கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சிக்ஸர்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகர் புகழ், தொடர்ச்சியாக நல் பல படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக "அயோத்தி", "ஆகஸ்ட் 16 1947", "கருங்காப்பியம்" மற்றும் "காசேதான் கடவுளடா" உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. 

விரைவில் வெளியாகவுள்ள "மிஸ்டர் ஜூ கிப்பர்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நாயகனாக நடித்திருக்கிறார் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைதிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட புகழுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்று தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களுக்கு தனது மனைவியோடு இணைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் புகழ்.

Trisha: என்னால் நடிக்க முடியாது.. ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த ராஜமௌலியை திருப்பி அனுப்பிய த்ரிஷா! ஏன் தெரியுமா?

click me!