- Home
- Gallery
- Trisha: என்னால் நடிக்க முடியாது.. ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த ராஜமௌலியை திருப்பி அனுப்பிய த்ரிஷா! ஏன் தெரியுமா?
Trisha: என்னால் நடிக்க முடியாது.. ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த ராஜமௌலியை திருப்பி அனுப்பிய த்ரிஷா! ஏன் தெரியுமா?
இயக்குனர் ராஜமௌலி தேடி சென்று ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த நிலையில், ஹிட் படத்தில் நடிக்க முடியாது என த்ரிஷா மறுத்துவிட்டாராம். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

trisha photo gallery
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது பல நடிகர் - நடிகைகளின் கனவாக இருக்கும் நிலையில், இவரே தேடி சென்று... ஹீரோயின் வாய்ப்பு கொடுத்த போது கூட, அதை வேண்டாம் என மறுத்துள்ளார் பிரபல நடிகை த்ரிஷா. அது எந்த படம்? ஏன் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
trisha krishnan
தெலுங்கு மொழி இயக்குனரான ராஜமௌலி இதுவரை ஒரு பிளாப் படங்களை கூட கொடுக்காதவர். அதே போல் இவர் இயக்குனராக அறிமுகமான 'ஸ்டூடெண்ட் நம்பர் 1' படத்தில் இருந்து அடுத்தடுத்து இயக்கிய சிம்ஹாட்ரி, விக்ரமார்குடு, மகதீரா என ஒவ்வொரு படங்களுக்கும் இவரின் அபார திறமையை வெளிகொண்டுவந்த படங்களாகவே அமைந்தன.
அந்த வகையில் இவர், 2010-ஆம் ஆண்டு காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் (Maryada Ramanna) மர்யதா ராமண்ணா. இந்த படத்தில் அப்போது தெலுங்கு திரையுலகில் படு பிஸியான ஹீரோயினாக இருந்த நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகியுள்ளார் ராஜமௌலி. ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டுவந்த த்ரிஷா, ஹீரோ சுனில் என்றதும், அந்த படத்தில் நடிக்க முடியாது என ராஜமௌலியை திருப்பி அனுப்பி விட்டாராம்.
மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த சிலர், சுனிலை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை எடுக்க வேண்டாம் என கூறிய பொதும்... ராஜமௌலி துணிந்து இயக்கினார். இப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதாவது 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 40 கோடி வசூலை அள்ளியதாம்.
த்ரிஷா இந்த வாய்ப்பை மறுத்த பின்னர், ராஜமௌலி ஸ்டார் ஹீரோயின்களுக்குப் பதிலாக அறிமுக நடிகையான சலோனியை இந்த படத்தில் நடிக்க வைத்தார். சலோனி முதல் படத்தில் வெற்றி நாயகியாக அறியப்பட்டாலும், அடுத்தடுத்த வாய்ப்புகளை கவனமாக தேர்வு செய்ய தவறியதால்... தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.