Chennai Viral Video: சென்னையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி இழுத்துச் சென்ற எருமை மாடு; வைரல் வீடியோ!!

Jun 17, 2024, 3:19 PM IST

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே சாலைகளில் நடந்து செல்பவர்களை மாடுகள், தெரு நாய்கள் தாக்கவதும், இதனால் பொதுமக்கள் காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் சாலைகளில் கேட்பாரற்று சுற்றித் திரியும் மாடுகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்வார்கள் என அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் தற்போது மீண்டும் சாலைகளில் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதும், அவை பொதுமக்களை தாக்குவதும் தொடங்கியுள்ளது.

அந்த வகையில், சென்னை திருவொற்றியூரில் சாலையில்  நடந்து சென்ற பெண் ஒருவரை அவ்வழியாக வந்த எருமை மாடு ஒன்று கடுமையாக முட்டி தாக்கி உள்ளது. அப்போது அப்பெண் எருமையின் கொம்பு பகுதியில் சிக்கிக் கொண்ட நிலையில், அப்பெண்ணை எருமை மாடு தரதரவென இழுத்துச் சென்றதில் அப்பெண் படுகாயமடைந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.