Top 10 TRP: தடாலடியாக டாப் 10 TRP-யில் இடம்பிடித்த விஜய் டிவி புது தொடர்! ரேட்டிங்கில் சரிவை சந்தித்த சன் டிவி

First Published Apr 4, 2024, 7:14 PM IST

ஒவ்வொரு வாரமும், மக்கள் அதிக அளவில் விரும்பி பார்க்கும் சீரியல்கள் பற்றிய தகவல் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்தின் 13 வது வாரத்திற்கான அர்பன் மற்றும் ரூரல் டேட்டா குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
 

இந்த வாரம் வழக்கம் போல், முதலிடத்தை பிடித்துள்ளது 'சிங்க பெண்ணே' சீரியல். 10 .15 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில்... ஆனந்தி ஒரு வழியாக அன்பு நல்லவர் என்பதை புரிந்து கொண்டார். அதே நேரம் ஆனந்தி வாழ்க்கையை கெடுப்பதற்காக நந்தா என்பவரை மித்ராவால் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆனந்தி உண்மையை அறிந்து தன்னை காப்பாற்றி கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதைத் தொடர்ந்து 9. 68 டிஆர்பி புள்ளிகளுடன் கயல் சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தன்னை சுற்றி நடக்கும் அனைத்து சதிகளையும் முறியடித்துவிட்டு, எழிலுடன் சேர உள்ள கயலுக்கு மீண்டும் ஒரு பிரச்சனை தற்போது வந்துள்ளது. இதை எப்படி, சமாளிப்பார் ? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Nabha Natesh: நடிகர் நிகில் நடிப்பில் உருவாகும் ‘சுயம்பு’ படத்தில் இணைந்தார் நடிகை நபா நடேஷ்!

மூன்றாவது இடத்தில் 'எதிர்நீச்சல்' சீரியல் உள்ளது. இந்த வாரம் 8 .74 டிஆர்பி புள்ளிகளை கைப்பற்றியுள்ள இந்த சீரியலில், எப்படியும் தர்ஷினியை உண்மையாயின் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்கிற முடிவில் குணசேகரன் இருக்க, அதனை கதிர், ஞானம், சக்தி, ஆகியோர் இணைந்து முறியடிப்பார்களா? சக்தி, ஜனனி மற்றும் அவருடைய அம்மா தங்கையை கண்டுபிடிப்பாரா என்கிற பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தை கைப்பற்றி உள்ளது 'வானத்த போல' தொடர். தன்னுடைய கணவர் மீது அளவில்லாத காதல் இருந்தும் துளசி, ராஜபாண்டியை விட்டு விலகுவது போல் நடித்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பொன்னியின் தந்திரத்தை அறிந்து கொண்டு, ராஜபாண்டியுடன் சின்ராசு தங்கையை சேர்த்து வைப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

திருமணமான இயக்குனரை உருகி.. உருகி காதலித்த பானுபிரியா! இரண்டாம் திருமணம் செய்யாதது ஏன்? உண்மையை உடைத்த பிரபலம்

Iniya Serial

இந்த சீரியலை தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் ஐந்தாவது இடத்தை கைப்பற்றி உள்ளது ஆலியா மானசா - ரிஷி நடித்துவரும் 'இனியா' தொடர். இந்த வாரம் 7.8 TRP புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில், இனியாவை ஜெயிலில் உள்ளேயே வைத்து கொலை செய்ய முயற்சி நடக்கும் நிலையில், இதனை எப்படி விக்ரம் தடுத்து நிறுத்துவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

ஆறாவது இடத்தை கைப்பற்றியுள்ளது 'சுந்தரி' சீரியல். பொதுவாக டாப் 5 ரேட்டிங் பட்டியலில் இடம் பிடிக்கும் இந்த தொடர், இந்த முறை ஆறாவது இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது. கார்த்தியிடம் இருந்து தன்னுடைய மகள் தமிழை காப்பாற்ற போராடும் சுந்தரி, விஜய் மீதுள்ள காதலை உணர்ந்து அவரையே திருமணம் செய்து கொள்வாரா? என்பதை அறிய பல ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

Ajith Video: பார்த்தாலே அல்லு விடுது.. விடாமுயற்சி படப்பிடிப்பில் தலைகுப்புற கவிழ்ந்த அஜித்தின் கார்! வீடியோ!
 

ஏழாவது இடத்தை கைப்பற்றி உள்ளது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த வாரம் 7 .9 ஒன்று புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில், மண்டபத்தில் நடந்த பிரச்னையை மனதில் வைத்து கொண்டு, விஜயா முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற நினைக்கிறார். முத்து தன்னுடன் தந்தையையும் அழைக்க... விஜயா மனம் மாறுவாரா? அல்லது வீட்டை விட்டு வெளியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதைத் தொடர்ந்து எட்டாவது இடத்தில் விஜய் டிவியில் மற்றொரு சூப்பர் ஹிட் தொடரான பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. 6. 93 டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளை பெற்றுள்ள இந்த தொடரில், பாக்யாவுக்கு லாபம் இல்லை என்பதை அறிந்து கோபி ஏளனமாக பேசிய நிலையில், கோபிக்கு உதவி செய்து... பாக்கியா தக்க பதிலடி கொடுத்துள்ளார். வரும் நாட்களில் இன்னும் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Arundhathi Nair: விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகை கவலைக்கிடம்! உறவினர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

இதை தொடர்ந்து, இந்த வாரம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர் சீரியல். ராஜி மற்றும் கதிரின் ஊடல் ட்ராக் ஒரு பக்கம் சுவாரசியமாக சென்று கொண்டிருக்க, சரவணன் மற்றும் அழகு மயில் திருமண காட்சிகள் விரைவில் அரங்கேறும் என தெரிகிறது.

இந்த வாறன்  டிஆர்பி ரேட்டிங்கில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது சமீபத்தில் துவங்கப்பட்ட விஜய் டிவியில் புதிய தொடரான 'சின்ன மருமகள். தமிழ்ச்செல்வியை சேது திருமணம் செய்து கொள்ள பல்வேறு தடங்கல்கள் இருந்த நிலையில், அவை அனைத்தையும் முறியடித்துவிட்டு தமிழை... சேது திருமணம் செய்துள்ளார். எனினும் திருமணத்தை நிறுத்த முதலில் போன் செய்தது தமிழ் என்கிற உண்மை எப்போது வெளிவரும், என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  அதேபோல் சேது தற்போது தமிழை விழுந்து விழுந்து காதலிக்கும் நிலையில்... தமிழ் செய்த காரியம் தெரிய வந்தால் என்ன நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Pugazh Net Worth: 50 ரூபாய்க்கு கிளீனராக வேலை பார்த்த.. விஜய் டிவி புகழ் இன்று இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா
 

click me!