சென்னை ஐஐடி வளாகத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் இசைப்பள்ளி மையம் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி நிர்வாகமும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து, ஐஐடி வளாகத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையத்தை துவங்கியுள்ளனர். முற்றிலும் மூங்கிலால் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகள் சார்ந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை ஐஐடி செய்து வருகிறது. பல்துறை சார்ந்த சாதனையாளர்களின் பெயரில், அவர்களது நன்கொடை மூலம், பல்வேறு சிறப்பு மையங்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே இயங்கி வருகின்றன . அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜா இணைந்திருக்கிறார்.
undefined
விமான விபத்துகளில் உயிரிழந்த உலகின் மிக முக்கிய தலைவர்கள்.. யார் யார் தெரியுமா.?
ஐஐடி வளாகத்திற்குள், மேஸ்ட்ரோ இளையராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி மையம் ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில் இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நிறைவேறியது. இசையமைப்பாளர் இளையராஜாவும், ஐஐடி இயக்குனர் காமகோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர்.
சிறப்பு மையத்திற்கான கல்வெட்டையும் இளையராஜா திறந்து வைத்தார் . இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக ஒரு வாரம் நடத்தப்பட உள்ள விழாவின் துவக்க நிகழ்ச்சி, சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று மாலை நடந்தது . இந்த விழாவில் தான் ஐஐடி வளாகத்தில் இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..