ரௌடியின் மனைவியுடன் தகாத உறவு; சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை - போலீஸ் வலைவீச்சு

By Velmurugan s  |  First Published May 20, 2024, 1:43 PM IST

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் என்ற கருப்பு தினேஷ்.. மூலக்கடையில் வாட்டர் வாஷ் வேலை செய்து வந்தார். இவர் மீது வேப்பேரி, தலைமைச் செயலக காலனி ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. நேற்று இரவு தினேஷ் புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் வைத்து நண்பரான ரவுடி கார்த்தி என்பவருடன் சம்பவ இடத்தில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை தடுக்க கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் முயற்சி - பழனிசாமி குற்றச்சாட்டு

Tap to resize

Latest Videos

undefined

அப்போது அங்கு வந்த வியாசர்பாடியைச் சேர்ந்த இமான் என்ற இம்மானுவேல் மற்றும் சிலர் திடீரென தினேஷை கத்தியால் வெட்டி விட்டு தப்பி உள்ளனர். தகவல் அறிந்து வேப்பேரி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய தினேஷ் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி தினேஷ் உயிரிழந்தார்.

மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை: குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவியுங்கள் - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

போலீஸ் விசாரணையில், இமானின் மனைவியுடன் தினேஷ் தவறான உறவில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.  பலமுறை இமான் கண்டித்த நிலையில் தவறான உறவு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த இமானுவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேசை கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு வெட்டி படுகொலை செய்துள்ளார்.  மேலும் கொலை சம்பவத்தில் தொடர்புடைய தப்பிச்சென்ற 6 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!