Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Train : "இது என்ன சதாப்திக்கு வந்த சோதனை".. கனமழையால் Super Fast ரயிலில் ஒழுகிய மழை நீர் - மக்கள் அவதி! Video!

Ansgar R |  
Published : May 20, 2024, 11:22 PM IST

Jan Shatabdi Train : கோவை முதல் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சென்று, மீண்டு அதே வழியில் திரும்பும் சூப்பர் பாஸ்ட் ரயில் தான் ஜன் சதாப்தி. 

தமிழகத்தில் தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகின்றது, இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கோவை - மயிலாடுதுறை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் மழை நீர் பெட்டிகளுக்குள் ஒழுகியதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

கோவையில் இருந்து ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் முக்கியமான எக்ஸ்பிரஸ் இரயில் இதுவாகும். செவ்வாய் கிழமைகளை தவிர நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இதில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று கரூர் - ஈரோடு இடையில் பெய்த கனமழையில் மழை நீர் ரயில் பெட்டிக்குள் (D14) ஒழுகியதால் பயணிகளும் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் அவதிக்குள்ளாகினர். 

மேலும் மழை நீர் ஒழுகும் இடத்தில் டீ குடிக்கும் பேப்பர் கப்பை வைத்து மழை நீர் விழுகாதவாறு பயணிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை - கோவை ஜனசதாப்தி ரயிலில் இதே போல் மழை நீர் ரயில் பெட்டிகளுக்குள் ஒழுகியது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

01:36நேபாளம் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாயம்: டிரோன் காட்சிகள்!
05:43நாகப்பட்டினத்தில் நில இழப்பீடு கேட்டு விவசாயிகள், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திரள் போராட்டம்!
02:53நேபாள வெள்ளத்தில் 21 தமிழர்கள் மீட்பு - நயினார் நாகேந்திரன் தகவல் !
01:34சென்னை புழல் சிறைக்கு சென்று முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு !
03:31VCK விமர்சனம்... பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்: அரசியலில் கிளம்பிய புதிய புயல்!
03:24சென்னை பார்முலா 4 ரேஸ் விவாதம் : சட்டமன்றத்தில் அருண் ராஜ் - உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!
08:18#சட்டப்பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேசினாலே சண்டைத்தான் வருகிறது ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:18உடனடி நடவடிக்கை தேவை!" – நேபாள வெள்ளத்தில் தவிக்கும் தமிழர்கள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் அவசர ஆய்வு!
04:16DMK-ADMK-BJP : திமுக-அதிமுக-பாஜக கூட்டணி அமையப்போவதைச் சொல்லும் 5 முக்கிய அரசியல் அறிகுறிகள்!
04:32தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கார்த்தி சிதம்பரம் பேச்சு: மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பு!