Tamil Nadu Rain : தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பேய் மழை பரவலாக வெளுத்து வாங்கி வருகின்றது. இந்த நிலையில் நாளை காலை வரை பல இடங்களில் அதிக மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது, இந்நிலையில் நாளை (மே 21ம் தேதி) காலை வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமானது முதல், அதிகனத்த மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதால், காலை பணிக்கு செல்பவர்கள் அதற்கு தகுந்தார் போல ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் ஆகிய 20 மாவட்டங்களில் நாளை காலை வரை மிதமானது முதல் அதிகனத்த மழை வரை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
undefined
ராமநாதபுரத்தில் திடீரென அடுத்தடுத்து கரை ஒதுங்கிய 3 திமிங்கலங்கள்; அதிகாரிகள் துரித நடவடிக்கை
அதிலும் குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனத்த மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி தென் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வருகின்ற 21ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் நல்ல மழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளது.
மேலும் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் புயல் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிக அளவில் நீர் தேங்கும் இடங்களிலும், ஆறுகள் உள்ள பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 7 நாட்களுக்கு தமிழகத்தை பொறுத்தவரை நல்ல மழைக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.