வயசுக்கு ஏற்ற உடையில்... 'குட்டி' நயன் அனிகா!! தீபாவளி ஸ்பெஷல் போட்டோஸைப் பார்த்து குதூகலமான ரசிகர்கள்!

First Published Nov 5, 2021, 5:43 PM IST

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து ஹீரோயினாக மாற துடித்துக்கொண்டிருக்கும் அனிகா (Anikha) , படு ஹாட் உடையில் அண்மை காலமாக புகைப்படம் வெளியிட்டுவரும் நிலையில், தற்போது... தீபாவளிக்கு தன்னுடைய வயசுக்கு ஏற்ற போல் உடை அணிந்து வியக்க வைத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரங்கள் பலரும் தற்போது ஹீரோயினாக விஸ்வரூபம் எடுக்க முயன்று வரும் நிலையில், பேபி நட்சத்திரத்தில் இருந்து பிரபல நடிகையாக மாற அதிரடி காட்டி வருகிறார் அனிகா சுரேந்திரன்.

மலையாள திரையுலகில் இருந்து துறுதுறு சுட்டிப்பெண்ணாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவனர் அனிகா. தமிழில் அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானார். எடுத்த எடுப்பிலேயே அஜித் மகளாக நடித்ததால் அனிகாவிற்கு மார்க்கெட் கூடியது.

தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். குயின் வெப் சீரிஸிலும் முக்கிய ரோலில் நடித்தார் அனிகா. தற்போது மாமனிதன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாராவிற்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தரை பார்த்து கண் வைக்காத ரசிகர்களே கிடையாது. அப்படி தனது குறுநகையாலும், குறும்புத்தனத்தாலும் ரசிகர்களை கொக்கி போட்டு வசீகரித்தார்.

சினிமா, வெப் சீரிஸ் எல்லாம் தாண்டி மாடலிங்கில் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் அனிகா டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக ரக ரகமாய், வித்தியாசமாய் போஸ் கொடுத்து வருகிறார்.

அடுத்த நயன்தாராவே நான் தான் என்பது போல் விதவிதமான போட்டோக்களை பதிவிட்டு அசத்தி வருகிறார். அதுவும் பண்டிகை காலம் என்றாலே ஸ்பெஷல் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக மஞ்சள் நிற லாங் குர்தீஸ் அணிந்து, செம்ம ஸ்டைலிஷாக இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை குதூகல படுத்தியுள்ளது.

அண்மைய காலமாக படு பயங்கர கவர்ச்சி போட்டோசை பார்த்து விமர்சனம் செய்த ரசிகர்கள் கூட, அனிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து வயதுக்கு ஏற்ற போல் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் என புகழ்ந்து வருகிறார்கள்.

click me!