விஜய்யை சந்தித்த கமலா தியேட்டர் விஷ்ணு கமல்! நன்றி சொல்லி பாராட்டிய தளபதி! ஏன் தெரியுமா?

Published : Apr 30, 2024, 09:01 PM ISTUpdated : Apr 30, 2024, 09:39 PM IST
விஜய்யை சந்தித்த கமலா தியேட்டர் விஷ்ணு கமல்! நன்றி சொல்லி பாராட்டிய தளபதி! ஏன் தெரியுமா?

சுருக்கம்

GOAT படப்பிடிப்பிற்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய் விஷ்ணு கமலை வரவேற்று அவருடன் சிறிது நேரம் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, 'கில்லி' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி பெற விஷ்ணு கமல் வாழ்த்து தெரிவித்தார். 

கமலா திரையரங்க உரிமையாளர் விஷ்ணு கமல் தளபதி விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளார். GOAT படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று தளபதி விஜய்யைப் பார்த்திருக்கிறார்.

சென்னையில் உள்ள பிரபல கமலா திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு கமல். தீவிர விஜய் ரசிகரான இவர் திடீரென நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

GOAT படப்பிடிப்பிற்கு மத்தியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய் விஷ்ணு கமலை வரவேற்று அவருடன் சிறிது நேரம் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, 'கில்லி' திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் மாபெரும் வெற்றி பெற விஷ்ணு கமல் வாழ்த்து தெரிவித்தார்.

போலி கையெழுத்து போட்டு பெற்றோரின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாடு சென்ற மகன்!

'கில்லி' திரைப்பட பாடல்களை தொடர்ந்து ஒளிபரப்பியதற்காக விஷ்ணு கமலுக்கு நடிகர் விஜய் நன்றி சொன்னார். இந்தச் சந்திப்பில் எடுத்த படத்தில் விஜய் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் போட்டிருக்கிறார். விஷ்ணு கமல் விஜய் படம் போட்ட டீசர்ட் அணிந்து சிரித்துக்கொண்டே போஸ் கொடுக்கிறார்.

GOAT எனப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (Greatest Of All Time) படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. தாய்லாந்து, இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் ஹைதராபாத், புதுச்சேரி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் கூட சூட்டிங் நடந்துள்ளது

பள்ளி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு! நெகிழ்ச்சியில் ஆசிரியர் ஜேம்ஸ்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?