
தன்னுடைய தனித்துவமான இயக்கத்திற்கு பெயர் பெற்ற செல்வராகவன் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான தனுஷின் "காதல் கொண்டேன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன் பிறகு "புதுப்பேட்டை", "யாரடி நீ மோகினி", "ஆயிரத்தில் ஒருவன்" மற்றும் "மயக்கம் என்ன" போன்ற பல நல்ல திரைப்படங்களை தமிழ் திரை உலகுக்கு அவர் கொடுத்துள்ளார்.
குறிப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு அவருடைய இயக்கத்தில் வெளியான "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் 15 ஆண்டுகள் கடந்து இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அது மிகையல்ல. இறுதியாக கடந்த 2022 ஆம் ஆண்டு "நானே வருவேன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்த செல்வராகவன் அதே ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான, நெல்சன் திலீப் குமாரின் "பீஸ்ட்" மூலம் நடிகராகவும் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இந்நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு வைரலாகியுள்ளது.. அவர் வெளியிட்ட பதிவில் "ஐயோ.. இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே. இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள். புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும். இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்" என்று அந்த பதிவில் கூறியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.
கருத்தெல்லாம் மிகவும் நன்றாகத்தான் இருக்கின்றது, நிச்சயம் வாழ்வில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று தான், ஆனால் ஏன் இப்பொது இதை சொல்லியுள்ளர்கள் என்று அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது உங்கள் வாழ்க்கையில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டதா என்ற கேள்வியையும் அவர் ரசிகர்கள் முன் வைத்துள்ளனர்.
Aparna Das Reception Photos: நடிகை அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமண வரவேற்பு புகைப்படங்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.