Kasthuri : இதையா 4500 ரூபாய் குடுத்து வாங்கினீங்க? கடுப்பில் போஸ்ட் போட்ட கஸ்தூரி - வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்!

Ansgar R |  
Published : Apr 30, 2024, 02:26 PM IST
Kasthuri : இதையா 4500 ரூபாய் குடுத்து வாங்கினீங்க? கடுப்பில் போஸ்ட் போட்ட கஸ்தூரி - வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்!

சுருக்கம்

Actress Kasthuri : சென்னையில் பிறந்து கடந்த 1992ம் ஆண்டிற்கான மிஸ் சென்னை பட்டத்தை வென்ற நடிகை தான் கஸ்தூரி. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழியில்களில் நடித்துள்ளார். 

கடந்த 1974 ஆம் ஆண்டு மே 1ம் தேதி சென்னையில் பிறந்த நடிகை தான் கஸ்தூரி. தனது 18 வது வயதில் அவர் மிஸ் சென்னை பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 1991ம் ஆண்டு தனது 17வது வயதில் "ஆத்தா உன் கோவிலிலே" என்கின்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார். 

அன்று தொடங்கி மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல பல படங்களில் அவர் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டிலான கஸ்தூரி, சுமார் 7 ஆண்டுகள் திரைத்துறையில் பயணிக்காமல் இருந்தார். அதன் பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க தொடங்கினார். 

Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

தமிழ் படம் 2ல் ஒரு குத்து பாடலுக்கும் நடனமாடியிருந்தார் கஸ்தூரி. இறுதியாக தமிழில் வெளியான "ஸ்ட்ரைக்கர்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அவர், தனது சமூக வலைதள பக்கங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிடுவதன் மூலம், இணையவாசிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புக்கு உள்ளாவார் நடிகை கஸ்தூரி. 

இந்த நிலையில் கஸ்தூரி தற்பொழுது தான் வாங்கிய ஒரு செருப்பு குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அந்த வீடியோவில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 4500 கொடுத்து தான் ஒரு செப்பலை வாங்கியதாகவும், ஆனால் ஒரு மாதத்திற்குள் அந்த செப்பல் கிழிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். 

தன்னிடம் உள்ள அதிக விலை கொண்ட செருப்பு அது என்றும் கூறி அவர் அந்த நிறுவனத்தை குறைகூறி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அதற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், இந்த செருப்பையா 4500 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர், ஆஃபரில் வாங்கினால் இப்படி தான் இருக்கும் என்று கூறியுள்ளனர். 

அரண்மனை 4-க்கு போட்டியாக ரீ-ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?