தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி கோரிய அரசியல் கட்சிகள்.. இழுத்தடித்து அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையம்

By Ajmal Khan  |  First Published May 1, 2024, 12:37 PM IST

தண்ணீர் பந்தில் திறப்பின் மூலம் அரசியல் கட்சிகளும், வேட்பாளரும் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
 


தண்ணீர் பந்தல் திறக்க கட்டுப்பாடு

மிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தண்ணீர் பந்தல் திறக்க உத்தரவிட்டனர். ஆனால் தேர்தல் நடத்தி விதிகள் அமலில் இருப்பதால் தண்ணீர் பந்தல் கூட திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி கோரி அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தநிலையில் தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தண்ணீர்பந்தல் (தாகமுள்ள மக்களுக்கு இலவச தண்ணீர் விநியோகம்) திறப்பதற்கான அரசியல் கட்சிகளின் முன்மொழிவின் அடிப்படையில், எந்த ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்

எந்த ஓர் அரசியல் கட்சியும் / வேட்பாளரும் இந்தச் செயல்பாட்டின் மூலமாக எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது எனவும், தண்ணீர்பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே, தண்ணீர்பந்தல் திறக்க விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் / வேட்பாளரும், ஆணையத்தின் மேற்கண்ட வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, சுகாதாரம், தூய்மையான யான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்,

நடத்தை விதிமுறைகள்

அவர்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அவரவருடைய எல்லைக்குள் தேர்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றி சரியான முறையில் தண்ணீர்பந்தல் செயல்பாடுகள் நடைபெறுகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. பிறந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்

click me!