Election Release Date: விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published : Apr 30, 2024, 10:02 PM IST
Election Release Date: விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுருக்கம்

நடிகரும், இயக்குனருமான உறியடி விஜயகுமார் நடிக்கும், ரீல் குட் பிலிம்ஸின் 'எலக்சன்' மே 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை வழங்கிய பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.‌ 

'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கிறது. மேலும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'எலக்சன்' தொடர்பான பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் மக்களவை தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அத்துடன் இப்படத்தின்  வெளியீடு குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.‌ அந்த வகையில் எதிர்வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

விஜய்குமார்- தமிழ்- ரீல் குட் பிலிம்ஸ் கூட்டணியில் தயாராகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில்.. படத்தில் இடம்பெற்ற பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோ, படத்தின் டிரைலர் மற்றும் ஸ்னீக் பிக் ஆகியவை  தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரன்வீர் சிங்கின் கடைசி 6 படங்கள்: பிளாக்பஸ்டரை விட பிளாப்கள் அதிகம்
ஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன்: பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?