உலகக் கோப்பையை வென்ற பேட் கம்மின்ஸ், டி20 உலகக் கோப்பை கேப்டன் இல்லையாம் – ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

First Published May 1, 2024, 11:59 AM IST

டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

T20 World Cup 2024

ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துகின்றன.

T20 World Cup 2024

இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, நெதர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நேபாள், ஓமன், கனடா, உகாண்டா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, பப்புவா நியூ கினியா, நமீபியா, ஸ்காட்லாந்து, அயர்லாந்து என்று 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

Australia Team

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

australia team

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாயதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

மாற்று வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.

Australia T20 World Cup Squad

இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டது. டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஷ் நியமிக்கப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல காரணமாக இருந்தவர் மிட்செல் மார்ஷ். ஆதலால், அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Australia T20 World Cup 2024

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்த பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. மேலும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஐபிஎல் அதிரடி மன்னன் ஜாக் பிரேசர் மெக்கர்க் ஆகியோரும் இடம் பெறவில்லை.

T20 World Cup Australia Squad

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஆஸ்டன் அகர், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், நேதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஸ் ஹசல்வுட், ஆடம் ஜம்பா.

Australia T20 World Cup Squad

இதில், வார்னர், ஸ்டார்க், கம்மின்ஸ், ஹெட், மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஸ்டோய்னிஸ், க்ரீன் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!