Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match
ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 48ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match
ரோகித் சர்மா ஒரு பவுண்டரி உள்பட 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் 6 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்களில் அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த திலக் வர்மா 7 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match
அதன் பிறகு வந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் 5.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match
எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. ஆனால், இதில் ஏதேனும் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பை இழக்க நேரிடும்.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 4 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 3 போட்டியிலும், மும்பை இந்தியன்ஸ் ஒரு போட்டியிலும் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th Match IPL 2024
இதே போன்று ஏகானா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலாக நடந்த ஒரு போட்டியிலும் லக்னோ வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக நடைபெற்ற 12 போட்டிகளில் 6ல் லக்னோ வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்துள்ளது.