அஸ்வின், தினேஷ் கார்த்திக் உள்பட ஒரு தமிழருக்கு கூட டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு வழங்காத பிசிசிஐ!

First Published | Apr 30, 2024, 6:00 PM IST

பிசிசிஐ அறிவித்த டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்பட ஒரு தமிழர் கூட இடம் பெறவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

Ravichandran Ashwin,

ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் 9ஆவது டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான முதல் அணியாக 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதற்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், புதிய ஜெர்சியையும் நியூசிலாந்து அறிவித்தது.

India Squad for T20 World Cup 2024

இதைத் தொடர்ந்து தேர்வுக் குழு தலைவரான அஜித் அகர்கர், ரோகித் சர்மா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து ரோகித் சர்மாவின் 37ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Indian Cricket Team, T20 World Cup 2024

இதில், புதிதாக ஷிவம் துபே, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடைசியாக சாஹல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார்.

Team India

பிசிசிஐ அறிவித்த 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாயதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

ரிசர்வ் வீரர்கள்: சுப்மன் கில், ரிங்க் சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான்.

Ashwin, T20 World Cup 2024

இதில் ஒரு தமிழர் கூட இடம் பெறவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், மாயங்க் யாதவ் உள்ளிட்ட தமிழக வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

Dinesh Karthik

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் தினேஷ் கார்த்திக் விளையாடியதைக் கண்டு டி20 உலகக் கோப்பையில் சேர்த்திடலாம் என்பது போன்று குறிப்பிட்டார்.

Ravichandran Ashwin

ஆனால், அவருக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவர் மட்டுமின்றி, ரவிச்சந்திரன் அஸ்வின், சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், வாஷி, மாயங்க் யாதவ், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் உள்ளிட்ட எந்த வீரருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

India Squad for ICC Mens T20 World Cup Announced

கடந்த 2012, 2014, 2016, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று விளையாடினார். ஆனலல், 20224 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ICC Mens T20 World Cup 2024 Team India Squad Announced

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

T20 World Cup 2024

இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, ஓமன், கனடா, பப்புவா நியூ கினியா, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா, நியூசிலாந்து, நமீபியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நேபாள், நெதர்லாந்து ஆகிய 20 அணிகள் இடம் பெற்றன.

ICC Mens T20 World Cup 2024

முதல் கட்டமாக இந்த தொடரில் பங்கேற்கும் கேன் வில்லியம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது 2ஆவது அணியாக பிசிசிஐ 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.

Latest Videos

click me!