கோல்டன் டக்கில் ஹர்திக் பாண்டியா: தலைகீழா தான் குதிப்பேனு, குதித்த மும்பை இந்தியன்ஸ், 144 ரன்னுக்கு சரண்டர்!

Published : Apr 30, 2024, 10:21 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான 4ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

PREV
16
கோல்டன் டக்கில் ஹர்திக் பாண்டியா: தலைகீழா தான் குதிப்பேனு, குதித்த மும்பை இந்தியன்ஸ், 144 ரன்னுக்கு சரண்டர்!
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match

ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 48ஆவது லீக் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

26
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match

இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ரோகித் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதன் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் போதும் வரும் அவரது பிறந்தநாளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்திருக்கிறார்.

36
LSG vs MI

ரோகித் சர்மா பிறந்தநாள்:

2009 ஏப்ரல் 30, 17 ரன் (20 பந்துகள்)

2014 ஏப்ரல் 30, 1 ரன் (5 பந்துகள்)

2022 ஏப்ரல் 30, 2 ரன் (5 பந்துகள்)

2023 ஏப்ரல் 30, 3 ரன் (5 பந்துகள்)

2024 ஏப்ரல் 30, 4 ரன் (5 பந்துகள்) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

46
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match

சூர்யகுமார் யாதவ் 10, திலக் வர்மா 7, ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் முதல் பவர்பிளேயில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இஷான் கிஷான் 32 ரன்களில் ஆட்டமிழக்க, நேஹல் வதேரா மற்றும் டிம் டேவிட் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

56
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match

இதில், நேஹல் வதேரா 46 ரன்களில் ஆட்டமிழந்தார். முகமது நபி 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி வரை விளையாடிய டிம் டேவிட் 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

66
Lucknow Super Giants vs Mumbai Indians, 48th IPL 2024 Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ், நவீன் உல் ஹாக், மாயங்க் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories