Cleaning Hacks : அசைவம் சமைத்த பாத்திரத்தில் நாற்றம் அடிக்குதா.. அப்ப இந்த சிம்பிள் டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!

First Published May 1, 2024, 11:49 AM IST

அசைவ உணவால் பாத்திரங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தை நிமிடங்களில் போக்கக்கூடிய சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை நிச்சயம் உங்களுக்கு உதவும்.
 

பொதுவாகவே, அசைவப் பிரியர்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றைச் சமைத்துச் சாப்பிட்டு மகிழ்வார்கள். ஆனால், வீட்டில் அசைவம் செய்வதில் உள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால், சில சமயங்களில் பாத்திரங்களை நன்றாக கழுவிய பிறகும் கூட ஒரு வித்தியாசமான நாற்றம் அதிலிருந்து வீசுகிறது. 

அதுமட்டுமின்றி, இந்த வாசனை பாத்திரங்களில் இருப்பது மட்டுமின்றி, சமையலறை முழுவதும் பரவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், பாத்திரங்களில் இருந்து வரும் மீன் மற்றும் முட்டையின் வாசனையால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

பாத்திரங்களைக் கழுவிய பிறகும் சில நிமிடங்களில் அதிலிருந்து வரும் மீன் மற்றும் முட்டையின் வாசனையைப் போக்க சில எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றினால், பாத்திரத்தில் நாற்றம் அடிகாது மற்றும் சுத்தமாகவும் இருக்கும். சரி வாங்க இப்போது அதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்..

எலுமிச்சை: எலுமிச்சை, உணவில் மட்டுமின்றி சமையலறையை சுத்தம் செய்வதற்கும் பயன்படுகிறது. உங்கள் பாத்திரங்களில் இருந்து வரும் மீன் மற்றும் முட்டை வாசனையை போக்க, பாத்திரத்தில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு, பிறகு பாத்திரத்தை ஸ்க்ரப் செய்து கழுவினால் பாத்திரத்தில் நாற்றம் அடிக்காது. காரணம், எலுமிச்சையில் உள்ள இயற்கை அமிலம் துர்நாற்றத்தை எளிதாக நீக்கும்.

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா பாத்திரங்களை பளபளப்பாக்குவது மட்டுமின்றி, பாத்திரத்தில் அடிக்கும்  வாசனையையும் நீக்க உதவுகிறது. நீங்கள் பாத்திரங்களைக் கழுவுவதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு சமையல் சோடாவைச் சேர்த்து, அதில் பாத்திரங்களை சிறிது நேரம் அப்படியே ஊற வைத்து பிறகு சோப்பு போட்டு கழுவினால் துர்நாற்றம் வீசாது.

இதையும் படிங்க:  Kitchen Tips : பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்ய இனி கஷ்டப்படாதீங்க.. உங்களுக்கான ஈசி டிப்ஸ் இதோ!

வினிகர்: வினிகர் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி பாத்திரங்களில் இருந்து வரும் துர்நாற்றத்தையும் நீக்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், அசைவ உணவு சமைத்த பாத்திரத்தில் சிறிதளவு வினிகர் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். பிறகு 15-20 நிமிடங்கள் கழித்து பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரத்தில் வாசனை அடிக்காது.  

இதையும் படிங்க:  kitchen tips : உங்க கேஸ் பர்னர் புதுசு போல பளபளக்க இந்த 2 பொருளால் சுத்தம் பண்ணுங்க!

காபி தூள்: காபி பொடி குடிப்பதற்கு மட்டுமல்ல, பாத்திரங்களில் அடிக்கும் வாசனை நீக்குவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, பாத்திரம் கழுவும் தண்ணீரில் சிறிது காபி தூள் சேர்த்து, அதில் பாத்திரங்களை வைத்து சிறிது நேரம் கழித்து சோப்பு வைத்து கழுவினால் பாத்திரத்தில் மணக்கும்.

உப்பு: பாத்திரங்களில் இருந்து துர்நாற்றத்தை போக்க உப்பு உதவும். மீன் அல்லது முட்டை செய்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன், பாத்திரத்தில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். பின்  சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பாத்திரத்தில் துர்நாற்றம் அடிக்காது. உப்பு அதை உறிஞ்சும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!