சென்னையில் அமையவுள்ள புதிய பிராட்வே பேருந்து நிலையம் எப்படி இருக்கும் தெரியுமா.? வெளியான புகைப்படம் இதோ..

First Published May 21, 2024, 11:40 AM IST

சென்னையில் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ள நிலையில், பிராட்வே பேருந்து நிலையம் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படவுள்ளது. இதற்காக இந்த பேருந்து நிலையம் அகற்றப்பட்டு புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
 

brodway bus stand

மக்கள் தொகை பெருக்கம்- வசதிகள் அதிகரிப்பு

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் முக்கிய பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்தது. இந்த பேருந்து நிலையத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.

Koyambedu

கோயம்பேட்டிற்கு மாறிய பேருந்து நிலையம்

தற்போது கோயம்பேடு பகுதி நகரின் மையப்பகுதியாக உள்ளதால் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையின் புறநகர் பகுதியான கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டது. தற்போது தமிழகத்திற்கு பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
மீண்டும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்! வெளியான அறிவிப்பு! எந்தெந்த நாட்களில் தெரியுமா?

Latest Videos


brodway bus stand

பிராட்வேயில் புதிய பேருந்து நிலையம்

இந்தநிலையில் சென்னையில் மாநகர பேருந்துகள் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்த பல்வேறு இடங்களுக்கு புறப்பாடு வருகையின் முக்கிய இடமாக உள்ளது. தற்போது இந்த இடம் முழுவதுமாக அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.   நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தை இடித்து, நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. 
 

brodway bus stand

823 கோடியில் புதிய பேருந்து நிலையம்

இதற்காக ரூ.823 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது. 

brodway bus stand

10 மாடிகள் கொண்ட வணிக வளாகம்

அதற்கான மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பிராட்வே பேருந்து நிலையம் ஜூலை மாதம் தீவு திடலுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளநிலையில், சுமார் இரண்டு ஆண்டுகளில் இந்த கட்டிடம் கட்டி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

EPS vs Stalin : ஓட்டை-உடைசல் பஸ்கள் இயக்கி மக்களின் உயிரோடு விளையாடுவதா!! புதிய பேருந்துகளை வாங்கிடுக- இபிஎஸ்

click me!