HEAVY RAIN : தொடரும் கன மழை... காய்ந்து கிடந்த அணைகளில் நீர் வரத்து உயர்ந்ததா.? லேட்டஸ்ட் அப்டேட் என்ன.?

First Published | May 21, 2024, 10:01 AM IST

தமிழகத்தில் கோடைவெயிலின் தாக்கம் சற்று குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏரி மற்றும் அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரு சில அணைகளில் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

Dam

அணைகளின் நீர்மட்டம் என்ன.?

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடந்த 4 மாதங்களாக உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக பல ஏரிகள் மற்றும் அணைகளில் நீர்வரத்து பெரிதும் குறைந்தது. இதன் காரணமாக குடிநீர் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சப்பட்ட நிலையில், கோடை மழையானது தென் மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை, 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையிம் நீர்மட்டம் 45.07அடி யாகவும், வினாடிக்கு 518கன அடி உள் வரத்தாகவும் உள்ளன.

கன்னியாகுமரி மாவட்ட அணைகளின் நிலவரம்

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 49.45அடியாகவும் ,வினாடிக்கு 280கன அடி நீர்உள் வரத்தாகவும் உள்ளன. 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையில் 15.4அடியாகவும்,  54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையில் 14.44 அடியாகவும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம்  04 அடியாகவும். 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1அணையில் நீர்மட்டம்  11.61 அடியாகவும்.உள் வரத்து 104கன அடி நீரும் 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 11.71 அடியாகவும் ,உள் வரத்து 161கன அடியாகவும் உள்ளன.

TN Rain : விடிய விடிய கொட்டி தீர்க்கபோகுது மக்களே.. 20 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்!
 

Tap to resize

மேட்டூர் அணை நிலவரம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ் பவானி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 974 கன அடியிலிருந்து 1659 கன அடியாக  அதிகரித்துள்ளது . நீர்மட்டம் 105 அடி  தற்போது நீர்மட்டம் 45.57அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 390 கன அடியிலிருந்து 402 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 49.05 அடி. நீர் இருப்பு 17.21 டி.எம்.சி. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
 

dam

தென்காசி மாவட்ட அணை நிலவரம்

தென்காசி மாவட்ட  அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை கடனா அணையில், உச்சநீர்மட்டம் : 85 அடி நீர் இருப்பு : 31அடியாக உள்ளது. ராமா நதியில் உச்ச நீர்மட்டம் : 84 அடி, நீர் இருப்பு : 42  அடியாக உள்ளது. நீர்வரத்து : 10 கன அடி, வெளியேற்றம் : 10  கன அடியாக உள்ளது. கருப்பா நதியில் உச்சநீர்மட்டம்: 72 அடடி, நீர் இருப்பு : 33.14 அடியாக உள்ளது. குண்டாறு அணையில்  உச்சநீர்மட்டம்: 36.10 அடி, நீர் இருப்பு: 11.48 அடியாக உள்ளது. அடவிநயினார் அணையில் உச்ச நீர்மட்டம்: 132 அடி, நீர் இருப்பு: 50.25 அடியாக உள்ளது. 

குற்றாலத்திற்கு டூர் போறீங்களா.? 5 நாட்களாக தொடரும் தடை- எப்போது அருவியில் குளிக்க அனுமதிக்கப்படும் தெரியுமா.?
 

வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நேற்று இரவு அதன் முழு கொள்ளளவான 100 மில்லியன் கன அடி நீர் நிரம்பி அணையின் மொத்த உயரமான 126.28 அடியை எட்டி நிரம்பியது.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் கனமழை  ஏற்பட்டால்  அணைக்கு வருகிற உபரி நீர் வெளியேற்றப்பட இருப்பதாலும் வராக நதி கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வெள்ளை அபாய எச்சரிக்கை நீர்வளத் துறையினரால் விடுக்கப்பட்டுள்ளது

Latest Videos

click me!