Asianet News TamilAsianet News Tamil

kitchen tips : உங்க கேஸ் பர்னர் புதுசு போல பளபளக்க இந்த 2 பொருளால் சுத்தம் பண்ணுங்க!

கேஸ் பர்னர் பழுதாகிவிட்டால் அதை மீட்டெடுக்க நீங்கள் செய்யக்கூடிய சில குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..

kitchen tips simple tips to clean gas stove and burners easily at home in tamil mks
Author
First Published Mar 20, 2024, 11:15 AM IST

இப்போதெல்லாம் சமைப்பதற்கு மிகவும் எளிதானது எதுவென்றால் அது கேஸ் அடுப்பு தான். இன்னும் சொல்ல போனால் கேஸ் அடுப்பு இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. எல்லாருடைய வீடுகளிலும் இது கண்டிபாக இருக்கும். மேலும் இது இல்லத்தரசிகளின் நல்ல நண்பன் என்றே சொல்லலாம். ஏனெனில், இது அவர்களின் வேலையை ரொம்பவே சுலபமாக்குகிறது. அந்தவகையில், கேஸ் அடுப்புக்கு மிகவும் முக்கியம் எதுவென்றால் அது பர்னர் தான். 

பொதுவாகவே, உணவு சமைக்கும் போது பல முறை உணவு வெளியில் சிந்தி கேஸ் பர்னர் மீது விழுந்து அதன் ஓட்டை அடைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக, பர்னரின் சுடர் படிப்படியாக குறையும் அல்லது அதன் சுடர் முழுமையாக அணைந்து விடும். இதற்கு பர்னரை சுத்தம் செய்வதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்கலாம். ஆனால் அதை சுத்தம் செய்வது மிகவும் கடினமான பணி என்று பலர் நினைப்பார்கள்..

உண்மையில், கேஸ் அடுப்பின் பர்னரை வீட்டிலேயே சுத்தம் செய்யலாம் என்பதில் நம்மில் சிலருக்கு மட்டுமே தெரியும். எனவே, பழுதடைந்த உங்கள் கேஸ் பர்னரை மீட்டெடுக்க நீங்கள் விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். பழுதடைந்த உங்கள் கேஸ் பர்னர் புதுசு போல பளபளபாக இருக்கும்.

கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய கிளீனரை எப்படி தயாரிப்பது:
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, பாதி தண்ணீர் மற்றும் வினிகரை நன்கு கலக்க வேண்டும். பாட்டிலை நன்றாக குலுக்கி, அவை எல்லாம் நன்கு கலக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போது கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய கிளீனர் தயாராக உள்ளது.

கேஸ் அடுப்பை சுத்தம் செய்வது எப்படி?
கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய முதலில்  கேஸ் அடுப்பின் மீது தயாரித்து வைத்துள்ள கிளீனரை தெளிக்க வேண்டும். அதை சில நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு கடற்பாசி மூலம் கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக, ஈரமான சுத்தமான துணியால் வாயுவை நன்கு துடைக்க வேண்டும். வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கிளீனரின் உதவியுடன், பிசுபிசுபாக இருக்கும் உங்கள் கேஸ் அடுப்பு பளபளப்பாக இருக்கும்.

கேஸ் பர்னரை சுத்தம் செய்வது எப்படி?
கேஸ் பர்னரை சுத்தம் செய்ய முதலில், ஒரு பாத்திரத்தில் பாதி தண்ணீர் மற்றும் வினிகரை நன்கு கலக்க வேண்டும். இப்போது பர்னரை அதில் வைக்க வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் அப்படியே வைத்து விடுங்கள். பின்னர் பர்னரை அதிலுருந்து எடுத்து சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இதனையடுத்து, தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை நன்கு கலந்து பேஸ்ட் போல் செய்து, அந்த பேஸ்டை பர்னரில் தடவி 15-30 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்.

பின் அதிலிருக்கும் அழுக்குகளை அகற்ற ஸ்க்ரப் பிரஷ் அல்லது டூத் பிரஷ் பயன்படுத்தி அதை சுத்த செய்ய வேண்டும். பிறகு அதை ஒரு துணியால் நன்கு துடைத்து எடுங்கள். அவ்வளவுதான் பழுதடைந்த உங்கள் கேஸ் பர்னர் இப்போது பார்ப்பதற்கு புதுசு போல இருக்கும். மேலும் அதை நீங்கள் கேஸ் மீது வைத்து அடுப்பை ஆன் செய்து பாருங்கள். பர்னரில் இருந்து வரும்  சுடர் முன்பை விட பிரகாசமாக எரிவதை நீங்கள் காண்பீர்கள்.

முக்கிய குறிப்பு: கேஸ் அடுப்பை பயன்படுத்திய பிறகு, அதை ஒவ்வொரு நாளும் உடனடியாக சுத்தம் செய்ய மறக்காதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஈரமான துணியால்  சுத்தம் செய்யுங்கள். இது கேஸ் அடுப்பு மற்றும் பர்னர்களில் அதிகப்படியான அழுக்கு குவிவதைத் தடுக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios