விஜய், அஜித், சூர்யாவைத் தொடர்ந்து களமிறங்கும் தனுஷ்... #D43 லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா?

First Published Jul 27, 2021, 11:19 AM IST

தளபதி விஜய்யின் பீஸ்ட், தல அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களில் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி சோசியல் மீடியாவை மிரள வைத்த நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் தனுஷ் இடம் பிடித்துள்ளார். 

dhanush

‘அசுரன்’, ‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ என தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் கால் பதித்த தனுஷ், ஹாலிவுட்டிலும் தடம் பதித்து விட்டார். 

dhanush the gray man

‘அவெஞ்சர்ஸ்’ பட இயக்குநர்களான ஆந்தோனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்கி வரும் ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்த தனுஷ், தற்போது தமிழில் அடுத்தடுத்து காமிட்டாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில்  ‘நானே வருவேன்’ , தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா உடன் ஒரு படம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 திரைப்படம் என வரிசையாக தான் காமிட்டாகியுள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

dhanush

அந்த வரிசையில் அமெரிக்காவில் இருந்து ஹாலிவுட் பட ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு திரும்பிய தனுஷ், சென்னையில் நடைபெற்று வரும் கார்த்திக் நரேன் பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். 

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி 8ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷூடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மாளவிகா மோகனன் பதிவிட்டுள்ளார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டதை தொடர்ந்து ட்விட்டரில் #Dhanush #D43FirstLook போன்ற ஹேஷ்டேக்குகளை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

Thalapathy

இதற்கு முன்னதாக தளபதி விஜய்யின் பீஸ்ட், தல அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களில் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி சோசியல் மீடியாவை மிரள வைத்த நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் தனுஷ் இடம் பிடித்துள்ளார். 

click me!