சூர்யாவுடன் ரொமான்ஸ் பண்ண பாலிவுட்டில் இருந்து கவர்ச்சி நடிகையை களமிறக்கிய சிறுத்தை சிவா..!

First Published Jul 16, 2022, 9:17 AM IST

Suriya - Siva movie : சிறுத்தை, வீரம், விஸ்வாசம், அண்ணாத்த போன்ற படங்களை இயக்கிய சிவா, அடுத்ததாக சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதையடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைக்க உள்ளார் சூர்யா. இவர்கள் இருவரும் இணைய உள்ள படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கே.ஜி.எஃப் பாணியில் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... ‘மாமனிதன்’களுக்கு கிடைத்த அங்கீகாரம்... விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு

இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை மஹிரா ஷர்மா தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபின் பேமஸ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் மூலம் நடிகை மஹிரா ஷர்மா தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளாராம். நடிகர் சூர்யா கடந்த சில படங்களாக பிறமொழி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவனின் பிரியங்கா மோகன், வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டி என டோலிவுட் நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்த சூர்யா, சிவா இயக்கும் படத்துக்காக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

click me!