கடவுளாக மாறிய விஜயகாந்த்..! மகன் படிப்புக்கு கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஏழை தாய்க்கு பாலா செய்த உதவி!

Published : May 03, 2024, 01:42 PM IST

மகனின் படிப்பு செலவுக்கு காசில்லாமல், விஜயகாந்த் நினைவிடம் வந்து வேண்டிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த KPY பாலாவிடம் அவர் உதவி கேட்க, அவர் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொடுத்து உதவியுள்ளார்.
 

கைநிறைய பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டால், அதனை கண்ணும் கருத்துமாக சேர்த்து வைப்பவர்கள் மத்தியில், தொடர்ந்து பிறருக்கு தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருகிறார் பாலா. இதுவரை தனக்கென ஒரு கார் கூட வாங்கி கொள்ளாமல், மலை கிராமம், மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு 5 ஆம்புலன்ஸ், ஆட்டோ, மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் போன்றவற்றை தொடர்ந்து வாங்கி கொடுத்து வருகிறார்.

அதே போல் தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு, தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருகிறார். இவர் செய்த உதவியை கௌரவிக்கும் விதமாக தனியார் தொலைக்காட்சி ஒன்று விருது வழங்கி பாலாவை கௌரவித்தது.

அந்த விருதோடு, கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் வந்த பாலாவிடம்... கணவரை இழந்த ஏழை தாய் ஒருவர் மகனின் படிப்புக்கு உதவி கேட்க, தன்னுடைய கையில் இருந்த அனைத்து பணத்தையும் கொடுத்து உதவியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !