Asianet News TamilAsianet News Tamil

‘மாமனிதன்’களுக்கு கிடைத்த அங்கீகாரம்... விஜய் சேதுபதி, சீனு ராமசாமிக்கு கெளரவ டாக்டர் பட்டம் அறிவிப்பு

இலங்கை அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக பல்கலைக்கழகம் இணைந்து நடிகர் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் சீனு ராமசாமிக்கும் டாக்டர் பட்டம் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Honorary Doctorates for actor vijay sethupathi and director seenu ramasamy
Author
Tamil Nadu, First Published Jul 16, 2022, 8:21 AM IST

சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக காலடி எடுத்து வைத்தார் விஜய் சேதுபதி. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்ததோடு, அவரது சினிமா கெரியரிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்திற்கு பின்னர் தான் விஜய் சேதுபதியின் கெரியரும் அசுர வளர்ச்சி கண்டது.

இந்த வெற்றிக் கூட்டணி அடுத்ததாக தர்மதுரை படத்தில் இணைந்து பணியாற்றியது. மிகவும் எதார்த்த படைப்பாக உருவாகி இருந்த இப்படத்தில் அமோக வரவேற்பு கிடைத்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் இடம் பொருள் ஏவல் படத்தில் இணைந்து பணியாற்றினர். இப்படம் சில பிரச்சனைகளால் முடங்கிக்கிடக்கிறது.

இதையும் படியுங்கள்... ஹீரோவாக அவதாரம் எடுக்கும் 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்‌ஷன்..! துவங்கியது படப்பிடிப்பு..!

பின்னர் மாமனிதன் படத்தின் மூலம் இருவரும் 4-வது முறையாக இணைந்தனர். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருந்தனர். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி பேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் சீனு ராமசாமிக்கும் டாக்டர் பட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் இருவருக்கும் இலங்கை அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க வர்த்தக பல்கலைக்கழகம் இணைந்து Doctor Of Arts என்கிற கெளரவ டாக்டர் பட்டத்தை வருகிற ஜூலை 23-ந் தேதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?

Follow Us:
Download App:
  • android
  • ios