- Home
- Cinema
- ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?
Dhanush salary : ரூஸோ சகோதரர்கள் இயக்கியுள்ள தி கிரே மேன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், அவ்வப்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான ‘தி இன்கிரிடிபில் ஜர்னி ஆஃப் ஃபகீர்’ படம் மூலம் ஹாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த தனுஷ், தற்போது அங்கு தனது இரண்டாவது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கு தி கிரே மேன் என பெயரிட்டுள்ளனர்.
இப்படத்தை அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கி உள்ளனர். இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சான் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங், ஜூலியா பட்டர்ஸ், அனா டி அர்மாஸ் போன்ற ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... அமீரை கட்டி அணைத்து... எமோஷனல் பதிவுடன் காதலை உறுதி செய்த பாவனி!
தி கிரே மேன் திரைப்படம் வருகிற ஜூலை 22-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பிரீமியர் ஷோ திரையிடலில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் கலந்துகொண்டார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரல் ஆகின.
இந்நிலையில், தி கிரே மேன் படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிக்க அவர் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை சம்பளமாக பெற்றுள்ளாராம். இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.4 கோடி ஆகும். கோலிவுட் படங்களில் நடிக்க 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் தனுஷ், ஹாலிவுட் படத்திற்காக இவ்வளவு குறைவான தொகையை சம்பளமாக பெற்றுள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுமட்டுமின்றி இப்படத்தில் தனுஷுடன் நடித்த கிரிஷ் எவான்ஸுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலரும், ரியான் காஸ்லிங்கிற்கு 10 மில்லியன் அமெரிக்க டாலரும் சம்பளமாக கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஹீரோவாக அவதாரம் எடுக்கும் 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்ஷன்..! துவங்கியது படப்பிடிப்பு..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.