புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்த ஆர்சிபி – பிளே ஆஃப் சான்ஸ் இருக்கா? இன்னும் 3 போட்டி தான் இருக்கு!

First Published May 5, 2024, 8:38 AM IST

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடம் பிடித்துள்ளது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

எம் சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 52ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மடுமே எடுத்தது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

சுப்மன் கில் மற்றும் விருத்திமான் சகா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சகா 1 ரன்னிலும், கில் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் 6 ரன்னில் வெளியேறினார். ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

மில்லர் 30 ரன்னிலும், ஷாருக் கான் 37 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதில், ஷாருக் கான் ரன் அவுட் முறையில் விராட் கோலியிடம் ஆட்டமிழந்தார். ஷாருக் கானை ரன் அவுட் செய்த மகிழ்ச்சியில் அனுஷ்கா சர்மாவிற்கு பிளையிங் கிஸ் கொடுத்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

அடுத்து வந்த ரஷீத் கான் 18, விஜய் சங்கர் 10, மானவ் சுதர் 1, மோகித் சர்மா 0 என்று சொற்ப ரன்களில் வெளியேற குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் முகமது சிராஜ், யாஷ் தயாள், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். கேமரூன் க்ரீன் மற்றும் கரண் சர்மா தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் விராட் கோலி மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில் முதல் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி ஆர்சிபி 78 ரன்கள் குவித்தது. ஃபாப் டூப்ளெசிஸ் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் அரைசதம் அடித்தார். பின்னர் 5.5 ஆவது ஓவரில் ஃபாப் டூ ப்ளெசிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

முதல் முறையாக ஆர்சிபி இந்த சீசனில் பவர்பிளேயில் ஒரு விக்கெட் இழந்து 92 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 1, ரஜத் படிதார் 2, கிளென் மேக்ஸ்வெல் 4, கேமரூன் க்ரீன் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

அதிரடியாக தொடங்கி நிதானமாக முடித்த கோலி 42 ரன்களில் வெளியேறினார். கடைசியில் வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். ரஷீத் கான் ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் 3 பவுண்டரி உள்பட 16 ரன்கள் எடுத்தார்.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 13.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 21 ரன்னுடனும், ஸ்வப்னில் சிங் 15 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், எஞ்சிய 3 போட்டிகளிலும் அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். 2ஆவது சேஸிங் செய்தால் குறைவான ஓவர்களில் வெற்றி தேட வேண்டும். ஒருவேளை ஆர்சிபி 3 போட்டியிலும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்து ஆர்சிபிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அமையும். எஞ்சிய 3 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வி அடைந்தாலும் கூட பிளே ஆஃப் வாய்ப்பு இருக்காது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

தற்போது புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் ராஜஸ்தான், கொல்கத்தா ஹைதராபாத், மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. 5ஆவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. ஆர்சிபி ஒரு போட்டியில் சென்னை, ஒரு போட்டியில் பஞ்சாப் மற்றும் ஒரு போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

Royal Challengers Bengaluru vs Gujarat Titans, 52nd Match

வரும் 9 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தரம்சாலாவில் நடைபெறுகிறது. அடுத்து 62ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. கடைசியாக 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் பெங்களூருவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!