Tallest Man : மிக உயரமான இலங்கை தமிழர்.. அண்ணாந்து பார்க்க வைக்கும் மனிதர்.!! எத்தனை அடி உயரம் தெரியுமா.?

Tallest Man : மிக உயரமான இலங்கை தமிழர்.. அண்ணாந்து பார்க்க வைக்கும் மனிதர்.!! எத்தனை அடி உயரம் தெரியுமா.?

Published : May 12, 2024, 10:35 AM ISTUpdated : May 12, 2024, 10:36 AM IST

இலங்கை நாட்டில் மிக உயரமான மனிதராக குணசிங்கம் கஜேந்திரன் கண்டறியப்பட்டுள்ளார். 7அடி 2 அங்குலம் உயரம் குண்ட நபர் இவர், தனது குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், உதவி செய்யும் படி அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் உயர்ந்த மனிதர்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இலங்கையின் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார். இவர் யாழ்ப்பாணம் - சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர்  7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதனாலேயே இலங்கையில் தற்போது உயரமான மனிதனாக இடம் பிடித்துள்ளார். இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான 45 வயதுடைய இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கின்றார். இவர் அதிக உயரமாக இருப்பதனால் ஆட்டோவிற்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும். தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாகவும், இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற செருப்புகள் கூட கிடைக்கவில்லையென தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்தே தனக்கு கால்களுக்கு ஏற்ற செருப்புகள் வாங்கும் நிலை இருப்பதாக கூறினார்.  

 இலங்கையின் உயர்ந்த மனிதனாக இருந்தாலும் இவருக்கு வழங்கவேண்டிய அங்கீகாரத்தையும் செலுத்த வேண்டிய அக்கறையையும் பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. இவரது குடும்பம் தற்போது மிகவும் வருமை நிலையில் காணப்படுகிறது. இவர் ஒரு தமிழர், அதிலும் குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தமையால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையா என மக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.இதனிடையே சுல்தான் கோஷன் என்பவர் 8அடி 2 அங்குலம் உயரம் கொண்டவர் தான் உலகின் மிக உயர்ந்த மனிதர் ஆவார். 

03:23இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுக ஆயத்தம்: மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞர் அணி கூட்டம்
06:51மக்களின் தீர்ப்பை ஏற்கத் தயங்குவது ஏன்? - மு.க.ஸ்டாலின் கருத்துகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் !
08:06சென்னை: பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பு!
06:30வைகை நதியை மீட்புத் திட்டம்: மதுரையில் 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் பிரம்மாண்ட தூய்மை இயக்கம் !
04:20விநாயகர் சதுர்த்தி விழா: தூத்துக்குடியில் விறுவிறுப்பாக நடந்த மாட்டு வண்டி பந்தயம் !
02:11தவெக ஆட்சியாக ஆட்சியை நடத்தாமல் காட்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ! கி. வீரமணி பேட்டி
04:02திருச்சி : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமையில் நடந்த பெரியார் நினைவேந்தல் பேரணி !
02:38அரசு சட்டக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழா - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பங்கேற்பு !
03:14பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் ஆய்வு !
02:57விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்காதே! - அரசை கடுமையாக சாடி விவசாயிகள் சங்கத்தினர் பேட்டி !