கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில் பிள்ளையார் கோவில் வசிக்கும் கலியபெருமாள் மகன் பழனிசாமி என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர்.
காதலித்த பெண் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் செய்ய மறுத்த காதலன் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்ட விருத்தாசலம் அடுத்துள்ள பெருவரப்பூர் அண்ணா தெருவை சேர்ந்த ராசப்பன் மகள் மகாலட்சுமி. இவரும் அதே கிராமத்தில் பிள்ளையார் கோவில் வசிக்கும் கலியபெருமாள் மகன் பழனிசாமி என்பவரும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். மாற்று சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், மகாலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.
undefined
இதையும் படிங்க: எங்க அம்மாவோட கள்ளக்காதலன் ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணி 3 மாதம் கர்ப்பமாக்கிட்டான்.. கதறும் பள்ளி மாணவி!
ஆனால் பழனிச்சாமி ஒவ்வொரு முறையும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்நிலையில், பழனிசாமி பெற்றோர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு, மகாலட்சுமி ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர் என கூறி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னை காதலித்து ஏமாற்றிய பழனிச்சாமி மீது மகாலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பழனிசாமியை கைது செய்தனர். பின்னர் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 55 வயது மாமியாரை மடக்கிய மருமகன்! திருமணம் செய்து கொண்டதால் மாமனார் அதிர்ச்சி! நடந்தது என்ன?