சீமந்தத்திற்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணி; வாந்தி எடுக்க வந்தபோது ரயிலின் கதவு அருகே காத்திருந்த எமன்

By Velmurugan s  |  First Published May 3, 2024, 5:47 AM IST

வளையல் காப்பு விழாவுக்காக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பேரிடியாக வந்து சேர்ந்துள்ளது.


தென்காசி அருகே உள்ள மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது. கஸ்தூரி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கஸ்தூரி தனது குடும்பத்துடன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து சங்கரன்கோவில் வரை கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். 

விரைவு ரயிலானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தை கடந்த போது கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ரயிலில் படிக்கட்டு பகுதிக்கு சென்று வாந்தி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு திடீரென மயக்கமும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

தொழிலதிபரை தனிமையில் அழைத்து பணத்தை கறக்க நினைத்த கும்பல்; 30 நிமிடத்தில் சுத்து போட்ட நெல்லை போலீஸ்

இதில் அவர் நிலைத்தடுமாறி ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அவரது உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவரது உடலை மீட்ட விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று சென்றனர். 

அடுத்தடுத்து 3 கல்லூரி மாணவர்கள் தற்கொலை; அதிர்ச்சியில் பெற்றோர், போலீசார்

உயிரிழந்த கர்ப்பிணிக்கு வருகின்ற ஞாயிற்றுக் கிழமை வளையல் காப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும், மேலும் கோவில் திருவிழா, வளையல் காப்பை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்றுவிட்டதா அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

click me!