நேற்று இரவு அம்பலவானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் மது போதையில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவானம் பேட்டை கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகமும் அம்பேத்கர் சிலையும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அம்பலவானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நான்கு பேர் மது போதையில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இதையும் படிங்க: என் கணவரை சாகடிச்சு என்கிட்ட இருந்து பிரிச்சுட்டாங்க! என்னுடைய சாவுக்கு இவங்க தான் காரணம்! சிக்கியது கடிதம்!
அப்பொழுது பெட்ரோல் குண்டு அம்பேத்கார் சிலை மீது படாமல் பின்பக்கம் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுவற்றில் விழுந்து அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நள்ளிரவே விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய அம்பலவானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22), உள்ளிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தாயுடன் உல்லாசம்! இடையூறாக இருந்த 6 வயது சிறுமி துடிதுடிக்க கொலை? நடந்தது என்ன? போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை!