மோடிக்கு எதிராக ராகுலும், ஸ்டாலினும் வியூகம் வகுத்து களமாடி வருகின்றனர் - பிரசாரத்தில் திருமா பேச்சு

By Velmurugan s  |  First Published Apr 16, 2024, 1:25 PM IST

பிரதமர் மோடிக்கு எதிராக ஸ்டாலினும், ராகுல் காந்தியும் வியூகம் வகுத்து களம் கண்டு வருவதாக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இன்று பு.முட்லூர் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மக்களிடம் திருமாவளவன் பேசியதாவது, இன்றும், நாளையும் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். இன்னும் சந்திக்க வேண்டிய கிராமங்கள் நிறைய உள்ளன.

மூன்றாம் உலகப் போரை தடுப்பதற்கு மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - கோவையில் அண்ணாமலை பேச்சு

Latest Videos

undefined

இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல. நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி முக ஸ்டாலினும், ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக.விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைந்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

DMK : தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்.. 39 தொகுதி 31ஆக குறையும் -அலர்ட் செய்யும் ஸ்டாலின்

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுக தான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். ராகுல்- மு.க.ஸ்டாலினால் தான் மோடியை வீழ்த்த முடியும். 40 தொகுதியிலும் மு‌க ஸ்டாலின் தான் வேட்பாளராக இருக்கிறார். எனவே என்னை வெற்றி பெற செய்வதைவிட மு.க.ஸ்டாலினின் வியூகத்தை வெற்றி பெற செய்யுங்கள். கேஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம் என்றார்.

click me!