அட கடவுளே.. பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் உயிரிழந்த பரிதாபம்.. நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Apr 13, 2024, 11:40 AM IST

தன்னார்வலரான உமர் அலி கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். 


கடலூரில் தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு  கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி(36) பரிதாபமாக உயிரிழந்தார். 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் புதுத் தெருவை சேர்ந்தவர் அப்துல் சமத் மகன் உமர் அலி (36). இவரது மனைவி பர்ஹத் நிஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தன்னார்வலரான உமர் அலி கடந்த 12 ஆண்டுகளாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுடன் இணைந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதியில் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: ஷாக்கிங் நியூஸ்.. நாமக்கல் வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ 2.83 கோடி.. யாருடையது தெரியுமா?

இந்நிலையில் நேற்று பண்ருட்டி முத்தையா நகரில், தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பு ஒன்றை பிடித்து, பண்ருட்டி தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுபற்றி அறிந்த உமர் அலி, அந்த பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவதற்காக தீயணைப்பு நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கு ஒரு டப்பாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாம்பை அவர் வேறொரு டப்பாவுக்கு மாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க:  Today Gold Rate in Chennai : அப்பாடா! ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

அப்போது எதிர்பாராதவிதமாக பாம்பு உமர் அலியை கொத்தியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  தீயணைப்பு  வீரர்கள்  உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உமர் அலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு பிடி வீரர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!