ஷாக்கிங் நியூஸ்.. நாமக்கல் வாகன சோதனையில் கட்டு கட்டாக சிக்கிய ரூ 2.83 கோடி.. யாருடையது தெரியுமா?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Namakkal Rs. 2.83 crore seized.. election flying squad tvk

நாமக்கல் பரமத்தி வேலூர் காவேரி பாலம் அருகே வாகன சோதனையில் ரூ.2.83 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. . தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பறக்கும் படை மற்றும் நிலையான தேர்தல் அதிகாரிகளால் இதுவரை சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கோடை வெப்பத்தை தணிக்க வரும் மழை.. இந்த 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தரமான சம்பவம் இருக்காம்.!

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட பரமத்தி வேலூர் காவிரி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு முதல் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டர்.  அப்போது அவ்வழியாக வந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க: மோடி இரக்கமற்ற ஒர் சர்வாதிகாரி.. இது வரைக்கும் வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு ஒரு பைசா கூட கொடுக்கல.. உதயநிதி!

அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2.83 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அந்த பணம் இந்தியா ஒன் ஏடிஎம்.க்கு உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios