Seeman: வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறையால் முடக்க நினைப்பதா - சீமான் காட்டம்

By Velmurugan sFirst Published May 4, 2024, 10:25 AM IST
Highlights

வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் ஆய்வு மையத்திற்க எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட இருந்த நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் ஆய்வு மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

Savukku Shankar: சவுக்கு சங்கரை அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்து.. 3 பேர் படுகாயம்?

மேலும் தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்கு உரியது. கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.

மாட்டு சாணத்தை பொட்டலம் போட்டு கஞ்சா என விற்பனை; முதலீடே இல்லாமல் லட்சாதிபதியாக நினைத்த இளைஞர்கள்

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால்,  நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படும் எனவும் பேரறிவிப்பு செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!