Savukku Shankar: கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் படுகாயம்.. நடந்தது என்ன?
தேனியில் இருந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தாராபுரம் வழியாக கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்து செல்லப்பட்ட போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளானது.
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து போலீஸ் வாகனத்தில் சவுக்கு சங்கர் கோவை அழைத்து செல்லப்பட்டார். அப்போது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: BREAKING: வசமாக சிக்கிய யூடியூபர் சவுக்கு சங்கர்! தேனியில் வைத்து தட்டித்தூக்கிய போலீஸ்! என்ன காரணம் தெரியுமா?
இந்த விபத்தில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து 3 பேரும் மீட்கப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது தாராபுரத்தில் உள்ள வேலு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், விபத்தில் சவுக்கர் சங்கர் படுகாயமடைந்ததாக கூறப்படும் தகவலை போலீசார் திட்டவட்டவட்டமாக மறுத்துள்ளனர். யூடியூபர் சவுக்கு சங்கரை அழைத்து சென்ற வாகனம் விபத்து எனப் பரவும் தகவல் உண்மையே. ஆனால் சவுக்கு சங்கருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. காவலர்களுக்கே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. காவலர்கள் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து சவுக்கு சங்கரை வேறோரு வாகனத்தில் கோவை அழைத்து செல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கல்யாணம் ஆன 10 நாளிலேயே என் பொண்ண கொன்னுட்டாங்களே? கதறும் கணவர்.. நடந்தது என்ன?