அடுத்த 4 நாட்கள் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு; கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

By SG Balan  |  First Published May 5, 2024, 8:31 AM IST

தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்கள் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்கள் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கடந்த சில நாட்களில் சில இடங்களில் கோடை மழை பெய்து சூட்டைத் தணித்துள்ளது. மே 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

Tap to resize

Latest Videos

7ஆம் தேதி தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 8ஆம் தேதி தென்காசி, நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்கள் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையையும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிலத்தின் உரிமையாளர் யார்? கூகுள் மேப் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்! அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

click me!