
ஆரம்பத்தில், பிரபல இயக்குனரால் முத்தின மூஞ்சி என ரிஜெக்ட் செய்யப்பட்ட நயன்தாரா... பின்னர் ஐயா படத்தில் ஹீரோயினாக நடிக்க துவங்கி, தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடி போட்டார். பின்னர் விஜய், சூர்யா, அஜித், என முன்னணி நடிகர்களின் பல படங்களில் நடித்துள்ள நயன் சில காதல் சர்ச்சைகளில் சிக்கி மீண்ட பின்னரே லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரியாக மாறினார் .
நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா, கோலமாவு கோகிலா, அறம், போன்ற சில படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகராக வசூலிலும் சக்கை போடு போட்டது. நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது, அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கிய நயன் சுமார் 6 வருடங்கள் அவருடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில மாதங்களிலேயே, வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து இந்த நட்சத்திர ஜோடி. நடிப்பு, பிஸ்னஸ், தயாரிப்பு என பல வேளைகளில் பிசியாக இருந்தாலும், தங்களுடைய இரட்டை குழந்தைகளை கூடுதல் கவனத்துடன் பார்த்து கொள்கிறார்கள். மேலும் ஷூட்டிங்கிற்காக எங்கு சென்றாலும் தங்களுடைய குழந்தைகளை கூடவே அழைத்து செல்கிறார்கள்.
ஒரு தாய் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நயன்தாரா, சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது, எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நயன்தாராவின் ஒரு குழந்தை விக்னேஷ் ஷிவானிடமும், மற்றொரு குழந்தை வேறு ஒருவரிடமும் உள்ளது. இது கோடை காலம் என்பதால் குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து மிகவும் பத்திரமாக பார்த்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.