Dhivya Dharshini : கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் மிக சிறந்த தொகுப்பாளினியாக பயணித்து வரும் நடிகை தான் DD என்று அனைவரும் செல்லமாக அழைக்கும் திவ்ய தர்ஷினி.

நெற்களஞ்சியமாம் தஞ்சாவூரில் பிறந்து, தனது சிறு வயதிலேயே கலை உலகின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக 14வது வயதில் தொகுப்பாளினியாக மேடை ஏறியவர் தான் திவ்யதர்ஷினி. இவருடைய அக்கா பிரியதர்ஷினி அவர்களும் ஒரு மிகச் சிறந்த நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்பொழுதும் உண்டு. 

காபி வித் டிடி, அன்புடன் டிடி போன்ற பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தனது பெயரில் தொகுத்து வழங்கியவர் டிடி, சிறு வயது முதல் திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கியனார். தமிழில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக இவ்வாண்டு துவக்கத்தில் வெளியான கௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஸ்வா இமைபோல் காக்க திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

Trisha Car Collection : த்ரிஷானா சும்மாவா.. டாப் ஹீரோக்களுக்கு நிகரான கார் கலெக்ஷன் - ஒரு லிஸ்டே இருக்கு!

மேலும் இவர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திவ்யதர்ஷினி தற்பொழுது அமீரகத்தில் உள்ள துபாய் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு பிரபல புர்ஜ் கலிஃபா அருகே அமைந்திருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நீச்சல் குளத்தில் குளித்தபடி அவர் பதிவிட்டிருக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

View post on Instagram

பிரபல சுற்றுலா நிறுவங்களின் பிராண்ட் அம்பாசிடராகவும் திவ்யதர்ஷினி திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்தபோதே அவர் பண்பலை தொகுப்பாளராகும் வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.

Bollywood : "ஐயய்யோ நான் குடிக்க மாட்டேன்" - ஆல்கஹாலை பார்த்தாலே அலறும் டாப் 8 பாலிவுட் நடிகர்கள்!!