பிதாமகன் கெட்டப்புக்கு மாறிய கவின்! நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் கலக்கல் டீசர்

By manimegalai a  |  First Published May 3, 2024, 7:39 PM IST

நெல்சன் திலீப் குமார், தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள... திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய டீசர் ஒன்றை தற்போது படக்குழு வெளியிட படம் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
 


விஜய் டிவி தொலைக்காட்சியில் இருந்து, வெள்ளித்திரைக்கு வந்தவர்... இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இவர் நடிகை நயன்தாராவை கதையின் நாயகியாக வைத்து இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் மிரட்டியது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய டாக்டர் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், கடைசியாக ரஜினிகாந்தை வைத்து இவர் இயக்கிய 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.650 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் என்பதை தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ள தகவலை அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தார். மேலும் இன்று மாலை 6 மணியளவில் தான் தயாரிக்க உள்ள படத்தின் டைட்டில் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

Rioraj Next Movie:ஆண்களின் பிரச்னையை பேச...“மீண்டும் இணையும் “ஜோ” பட ஜோடி!

நெல்சன் தயாரிக்கும் படத்தில், நடிகர் கவின் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்கிற தகவலை அவரே சமீபத்தில் கலந்து கொண்ட படவிழாவில் தெரிவித்த நிலையில், தற்போது காமெடிக்கு பஞ்சம் இல்லாத வகையில், கலக்கலான டீசருடன் இப்படத்தின் டைட்டில் 'பிளடி பெக்கர்' என்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோவில் கவின், நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, மற்றும் இயக்குனர் சிவபாலன் ஆகியோர் உரையாடும் காட்சிகளும், இறுதியில் கவின் இப்படத்தில் பிதாமகன் கெட்டப்பில் நடிப்பதையும் உறுதி செய்துள்ளது படக்குழு.

'வேட்டையன்' பட பிடிப்பில் கோட்டு சூட்டில் கலக்கும் தலைவர்.. அமிதாப் பச்சனுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரல்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்... மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கவினை... இப்படத்தில் இதுவரை பார்த்திடாத கோணத்தில் பார்க்கலாம் என்பதை இந்த டீசர் உறுதி செய்துள்ளது. கவின் இயக்குனர் இலன் இயக்கத்தில் நடித்துள்ள ஸ்டார் படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!