Swimming  : இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் போட்டி.. 10 மணி நேரத்தில் கடந்து சாதித்த வீராங்கனைகள்

Swimming : இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு நீச்சல் போட்டி.. 10 மணி நேரத்தில் கடந்து சாதித்த வீராங்கனைகள்

Published : May 05, 2024, 08:49 AM IST

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12  நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE) நீந்தி சாதனை படைத்தனர்.

தலைமன்னார் டூ தனுஷ்கோடி

மகாராஸ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் செயல்பட்டு வரும் ராம் சேது திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சோந்நத மகராஸ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 12   நீச்சல் வீராங்கணைகள்  இரண்டு  குழுக்களாக  பிரிந்து இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு வரை உள்ள சுமார் 30 கி.மீ தொலைவிலான பாக்ஜலசந்தி கடற்பரப்பினை நீந்தி கடப்பதற்காக இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சகத்திற்க்கு  அனுமதி  கோரியிருந்தனர்.

இந்திய இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் வெள்ளிகிழமை பிற்பகல் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து இரண்டு படகுகளில் தங்கள் நீச்சல் பயிற்சியாளர் தலைமையில் மீனவர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் இலங்கை தலைமன்னார் சென்றனர். தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் (RELAY RACE)  நீந்த தொடங்கி 12 பேரும் மாலை  4.40 மணியளவில் (10 மணி நேரம் 20 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தார். நீந்தி சாதனை படைத்தவர்களை சுங்கத்துறை, சுற்றுலாப்பயணிகள் அரிச்சல்முனையில் வரவேற்றனர்

03:34திமுக ஆட்சியை வீழ்த்த எடப்பாடியார் சூளுரை! மதுரையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிரடி
08:00முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் பொய்யை பேசி....மக்களிடம் அச்சத்தை உருவாக்குகிறார் ! அண்ணாமலை பேட்டி
04:20விசில் புரட்சி தேர்தல் இது.! மத்தவங்க மாதிரி பொய் சொல்ல மாட்டேன்.! Vijay வாக்குறுதிகள் அதிரடி
05:52மிகப்பெரிய போராட்டம் நடக்கும்..! தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
03:22திமுக கூட்டணியில் விரிசல் இல்லை.! வதந்திகளுக்கு விசிக தலைவர் முற்றுப்புள்ளி.!
03:51₹10 லட்சம் காப்பீடு முதல் ஊதிய உயர்வு வரை - Vijay வாக்குறுதிகள் அதிரடி..
03:58வாக்கு வேட்டையாடும் விஜய்.! இளைஞர்கள் புடை சூழ தேர்தல் பிரசாரம்.! மேள தாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு.!
04:46தமிழகத்தில் பாஜக பாச்சா பளிக்காது.! பொலந்து கட்டிய வைகோ.!
04:29திருச்சியில் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தேர்தல் பிரச்சாரம்!
02:03கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக தேர்தல் பிரசாரம்!
Read more