Asianet News TamilAsianet News Tamil

லிபியா அகதிகள் வந்த படகில் மூச்சுத் திணறி 28 பேர் பலி

libya immigrants-death-in-boat-accident
Author
First Published Oct 6, 2016, 7:52 AM IST


ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து ஐரோபிய நாடுகளுக்கு அகதிகள் சென்ற படகில் அளவுக்கு அதிகமானமானோர் இருந்ததையடுத்து, அதில் மூச்சுத்திணறி 28 பேர் பலியானார்கள். 

லிபாயிவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான சண்டை நீடித்து வருவதால், வாழ்வாதாரம் தேடி அங்குள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.

இதில் மூன்றடுக்கு கொண்ட ஒரு படகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டனர். இந்த படகு மத்திய தரைக்கடல் வழியாக இத்தாலி சர்வதேச கடற்பகுதியான ஆஸ்டர் நகர் அருகே வந்த போது, கப்பலில் பழுது ஏற்பட்டு நடுக்கடலில் நின்றது.

இந்த படகு குறித்து தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படை மீட்புப்படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் படகின் 3 அடுக்குகளில் இருந்த ஏறக்குறைய ஆயிரம் அகதிகள் மீட்கப்பட்டனர். ஆனால், படகில் அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்பட்டு இருந்தால், மூச்சுத்திணறி 22 பேர் இறந்தநிலையில் கிடந்தனர்.

இதற்கிடையே மத்திய தரைக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் 33 படகுகளில் வந்த 4 ஆயிரத்து 655 அகதிகளையும் இத்தாலி கடற்படையினர் பத்திரமாக மீட்டனர்.

கடந்த திங்கள்கிழமை மத்திய தரைக்கடல் பகுதியில் நடந்த மீட்புப்பணியில் ஏற்குறைய 6 ஆயிரம் அகதிகள் மீட்கப்பட்டனர், இதில் 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த ஆண்டில் இதுவரை இத்தாலி கடற்பகுதியில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios