சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியபோது அங்கிருந்து  லட்சக்கணக்கானோர் நேரடியாக அமெரிக்காவுக்கு படையெடுத்தனர் என டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காத தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது ,  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . அமெரிக்கா ,  இத்தாலி , ஸ்பெயின் ,  ஜெர்மன் ,  பிரான்ஸ் ,  ஈரான் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  இதுவரை 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன .  உலகளவில் 14 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது ,  இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து கடந்துள்ளது . இதிலிருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.  

இதில் மிக முக்கியமானது அமெரிக்கா தான்,  வைரஸ் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது என ஆரம்பத்தில் கூறி வந்த அதிபர் ட்ரம்ப் தற்போது செய்வதறியாது  திகைத்து வருகிறார்,  அமெரிக்காவில் மட்டும் மூன்று லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் ,  இறப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் செய்தி வெளியிட்டுள்ள டைம்ஸ் பத்திரிகை ,  சீனாவில் ஹூபே மாகாணம் வுஹானில் வைரஸ் தீவிரமாக பரவியபோது அங்கிருந்து லட்சக்கணக்கானோர் நேரடியாக அமெரிக்காவுக்கு படையெடுத்தனர் ,  குறிப்பாக நியூயார்க் ,  லாஸ் ஏஞ்சல்ஸ் ,   சான் பிரான்சிஸ்கோ ,  சிகாகோ ,  சியாட்டில் மற்றும் டெட்ராய்ட் ஆகிய மாகாணங்களுக்கு அவர்கள் அதிக அளவில் வந்தனர் என்று தெரிவித்துள்ளது.  சீனா மற்றும்  பல்வேறு நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் படை எடுத்துள்ளதாக அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.  

சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடந்த பயண விவரங்களை  பகுப்பாய்வு செய்ததில் இத்தகவல் கிடைத்ததாக அந்த  பத்திரிக்கை தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸின் பிறப்பிடமான வுஹானில்  இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் நேரடியாக அமெரிக்காவுக்கு வந்ததாக அமெரிக்க சுகாதார துறை அதிகாரிகளும் சில  தரவுகளை சுட்டிக்காட்டியுள்ளனர் ,  இந்நிலையில் அமெரிக்காவில் வைரஸ் எப்போதும் பரவி இருக்கக் கூடுமென வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில்  ஜனவரி 20 ஆம் தேதி வாக்கில்  அமெரிக்காவில் வைரஸ் பரவி இருக்கக் கூடுமென அனுமானிக்கப்பட்டுள்ளது.   சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் உலகலாவிய தொற்று நோயாக மாறுவதற்கு முன்னரே அதாவது   ஜனவரி மாத முதல் வாரத்திலேயே சீன மக்கள் அதிக அளவில் அமெரிக்காவுக்கு வந்து இறங்கியதாக  நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வுஹானில் இருந்து மட்டும் கிட்டத்தட்ட 4000 பேர் அமெரிக்காவுக்கு படையெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்குப்  பின்னரே அமெரிக்கா சுதாரித்துக் கொண்டதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.  விமான போக்குவரத்தை  நிறுத்தப்போவதாக  ட்ரம்பு அறிவித்ததற்குப்   பின்னரும் சுமார் 40,000 பேர் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து குவிந்ததாகவும், அமெரிக்காவில் வைரஸ் இந்தளவுக்கு பரவுவதற்கு சீனார்களின் படையெடுப்பே  காரணமாக இருக்க கூடும் என்று சொல்லாமல் சொல்லியுள்ளது நியுயார்க் டைம்ஸ் நாளிதழ்.