தன் மனதில் தேக்கி வைத்திருந்த சில அபிப்ராயங்கள் குறிக்க இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க கவர்ச்சி நடிகை எழுதியுள்ள கடிதம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது .  பேவாட்ச்,  விஐபி போன்ற தொடர்களில் நடித்து பிரபலமானார் நடிகை பமிலா ஆண்டர்சன் கன்னடிய- அமெரிக்க நடிகையான இவர் 90களில்  பிளேபாய் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பிடித்த கவர்ச்சி நடிகை ஆவார் .  தற்போது இவருக்கு 52 வயதாகிறது,  சினிமா தொழிலுக்கு இடையே கால்நடை விலங்குகளுக்கான செயற்பாட்டாளராகவும் ஆண்டர்சன் செயல்பட்டு வருகிறார்.  பீட்டாவின் கௌரவ இயக்குநர்களில் ஒருவராகவும் இருக்கிறார் பமிலா. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி இருக்கிறார். 

அதில் ,  இந்தியா சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ஏற்ற நாடு என்றும், இந்தியாவில் அரிசிச்சோறு மற்றும்  வெஜ்பிரியாணி வாசம் தனக்கு பிடிக்கும் எனக் கூறியுள்ளார் பலிமா,  சீனா, ஜெர்மனி , ரஷ்யா என செல்லுமிடமெல்லாம் சைவ உணவையும் அதன் சிறப்பை ஏற்படுத்துக் கூறுகின்ற பிரதமர்  மோடியின் செயல் பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.  அதே நேரத்தில் இந்திய அரசு சார்பில் நடக்கும் விருந்துகளில் ஏன் சைவம் மட்டுமே பரிமாறக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  அத்துடன் இந்தியாவில் ,  குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ள பமிலா ஆண்டர்சன்,  பால் தயிர் ,  வெண்ணை ,  போன்றவற்றிற்காக கால்நடைகளை வளர்க்க வேண்டி இருக்கிறது,  ஆனால் அவற்றால் தான் சுற்றுச்சூழல் மற்றும்  காற்றும் மாசுபடுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.  

காற்று மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மனிதர்கள் மாஸ்க் அணிந்து கொள்கின்றனர் ஆனால் கால்நடைகள் என்ன செய்யும்.?  என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து சமூக வலைத்தளத்தில்  நடிகை பமிலாவின்  கருத்துக்கு எதிர்க் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது அதில், கால்நடைகளால் காற்று மாசுபாடு என்று சொல்லுவது வேடிக்கையாக உள்ளது .  ஒட்டு மொத்தத்தில் இந்தியாவில் கால்நடைகளை வளர்க்க கூடாது என பமிலா விரும்புகிறாரா.?  அல்லது கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்று சொல்ல வருகிறாரா எதுவுமே புரியவில்லையே என தெரிவிக்கின்றனர்.