Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவின் ராணுவ ரகசியத்தை திருடிய பாகிஸ்தான்..!! ஈராக்கைப்போல பாக் கையும் போட்டுதாக்க திட்டம்...??

அதேபோல் 38 முறைக்கும் மேலாக அமெரிக்காவில் ராணுவம் பயன்படுத்தும் கருவிகள் ,  சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார் . 

america accused Pakistan for theft american defense secrets and defense equipment's to Pakistan
Author
Delhi, First Published Jan 18, 2020, 4:06 PM IST

அமெரிக்காவின் அணு ஆயுத ஏவுகணை மற்றும் தொழில்நுட்ப தகவல்களை சட்டவிரோதமாக  பாகிஸ்தானியர்கள் திருடியதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது .  ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது .  பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன .  அந்த இயக்கங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தும் வகையில் சதி வேலைகளில்  ஈடுபட்டு வருகின்றன.   அதே போன்று பாகிஸ்தானில்  பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் பதுங்கி பயிற்சி பெற்று வருவதாக  இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன .  தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என பல ஆண்டுகளாக இந்தியா தெரிவித்துவரும் நிலையில் தற்போது அதேபோன்ற குற்றச்சாட்டை  அமெரிக்காவும் பாகிஸ்தான் மீது வைத்துள்ளது

america accused Pakistan for theft american defense secrets and defense equipment's to Pakistan.  

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஜான் சி டெமர்ஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  பிரிட்டன் , ஆங்காங் ,  கனடா  உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் 5 பேர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.  அதாவது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களுக்கு அமெரிக்க தொழில்நுட்பத்தை திருடி அனுப்பியுள்ளனர்.  அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை மீறி தொழில்நுட்ப தகவல்களை திருட இப் பாகிஸ்தானியர்கள் துணைபோயுள்ளனர் என  ஜான்சி டெமர்ஸ் அதில்  கூறியுள்ளார் .  அதேபோல் 38 முறைக்கும் மேலாக அமெரிக்காவில் ராணுவம் பயன்படுத்தும் கருவிகள் ,  சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார் . அமெரிக்காவின் இந்த அதிரடி குற்றச்சாட்டை  பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது .  

america accused Pakistan for theft american defense secrets and defense equipment's to Pakistan

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பாகவே அணுஆயுத தொழில்நுட்பங்களை ,  வடகொரியா ,  ஈரான் ,  லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு திருடி கொடுத்ததாக பாகிஸ்தான் விஞ்ஞானி மீது குற்றச்சாட்டு எழுந்தது .  1980ம் ஆண்டுகளில் அணுகுண்டு தயாரிக்கும் பலம் பெற்ற நாடாக மாறிய பாகிஸ்தான் அனு ஆயுத தடை சட்டத்தை மீறி தனது நட்பு நாடுகளுக்கு உதவியது பின்னரே தெரிய  வந்தது .  பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு சர்வதேச நாடுகளில் ஊடுருவி அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை திருடிவருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது . இதை  கண்டுபிடித்துள்ள அமெரிக்கா பாகிஸ்தானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன்,  தீவிரவாத ஒழிப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில்  அமெரிக்கா தன் பார்வையை தற்போது பாகிஸ்தான் பக்கம் திருப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது . 

Follow Us:
Download App:
  • android
  • ios