Asianet News TamilAsianet News Tamil

Video: கோவை அருகே நடந்த பயங்கர விபத்து… பெண் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

கோவை அருகே வேன் மோதி பெண் தூக்கிவீசப்பட்ட வீடியோ காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. 

கோவை அருகே வேன் மோதி பெண் தூக்கிவீசப்பட்ட வீடியோ காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வஞ்சிமாநகரை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி சத்தியவேணி. 53 வயதான இவர், பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் சொந்த வேலை காரணமாக நரசிம்மநாயக்கன்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க: Video: பந்திப்பூர் ஜீப் சவாரி முதல் முதுமலை ஆஸ்கர் தம்பதி சந்திப்பு வரை - பிரதமர் மோடியின் பயண வீடியோ

பின்னர் அங்கிருந்து கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது, தெற்குபாளையம் பிரிவு அருகே பின்னால் வேகமாக வந்த வேன், சத்தியவாணி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கிவீசப்பட்ட சத்தியவேணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

இதையும் படிங்க: ராகுல்காந்தியின் வெளிநாட்டு தொடர்பு! அம்பலப்படுத்தும் குலாம் நபி ஆசாத்!

இதனிடையே விபத்து குறித்த வீடியோ இணையத்தை வெளியாகியுள்ளது. அதில், சத்தியவேணி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த வேன் அவர் மீது மோதி அவர் தூக்கிவிசப்பட்டதை காணலாம். வேன் சத்தியவேணி மீது மோதுவதற்கு முன் மற்றோருவரையும் மோதியுள்ளது. அதில் இருந்தவர்களுக்கு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வீடியோ காண்போரை பதபதக்க வைத்துள்ளது. 

Video Top Stories